இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை "எந்த நேரத்திலும் ஒரு விளையாட்டின் போக்கை மாற்றும் திறன் காரணமாக, ரிஷப் பண்ட் அணிக்கு ஒரு சொத்தாகி விட்டார்" என்று கூறியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 21 வயதான பண்ட் தோனிக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் நட்சத்திர பேட்ஸ்மேனாகத் தனது பங்களிப்பை அணிக்கு ஆற்றியுள்ளார். இந்த ஆண்டிற்க்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதைப் பண்ட் பெற்றுள்ளார். இளம் வீரராகத் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளைப் போல டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் சிறந்த வீரராக இந்திய அணிக்கு இருப்பார். இளம் வீரர்களுக்குச் சில தொடர்களில் வாய்ப்பு தரப்பட்டு மூத்த வீரர்களான சர்மா, தவான் ஆகியோர் ஓய்வு எடுக்கலாம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.
"பண்ட் இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் 2 சதம் உட்பட 696 ரன்கள் மற்றும் 49.71 சராசரி. விக்கெட் கீப்பராக 40 கேட்ச்கள் பிடித்துள்ளார். டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சரியாக அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார். நாங்கள் தொடர்ந்து விளையாடி வருகிறோம், சிறிது ஓய்வு தேவை. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியுடனான வெற்றிகள் இந்தியாவில் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா அணியுடனான தொடரிலும் இந்திய அணியின் வெற்றிகள் தொடரும்" என்று தவான் கூறினார்.
ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு டி-20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணியுடன் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தவான் கடைசி மூன்று போட்டிகளில் எதிர்பார்த்த அளவில் தவான் விளையாடவில்லை. இந்திய அணிக்கு விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.
டி-20 போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பு டென்னிஸ் பந்துகளில் முன்னதாக பயிற்சி செய்து ஸ்விங், பௌன்சர் ஆகியவற்றை எதிர்கொள்வது எப்படி என்று அறிந்து விளையாடுவது பெரிதும் உதவியாக இருக்கும் என்று தவான் கூறினார். நான் டென்னிஸ் பந்தில் பயிற்சிகள் செய்யும் போது எல்லா நேரங்களிலும் ஒரே இடத்தில் பந்தைப் போட முடியாது. அதிக ஷாட்கள் முயற்சி செய்யும் போது, சிறந்த ஷாட்கள் போட்டியின் போது எளிதாக அடிக்க உதவும். ஆக்ரோஷமாக விளையாடுவதன் மூலம், அதிக விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று தவான் கூறினார். டி-20 போட்டிகளில் விளையாடும் போது ஒருநாள் போட்டிகளை போல் இல்லாமல் வேறு மனநிலையில் விளையாட முடியும்.
மே-ஜுலையில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெறும் ஐந்து ஒருநாள் போட்டிகள் போதுமானவை என்று நான் நினைக்கிறேன். உலகக்கோப்பைக்கு முன்பு டி-20 போட்டிகள் விளையாடுவது நல்லது என்று தவான் கூறினார்.
எழுத்து-பி.டி.ஐ
மொழிபெயர்ப்பு-சுதாகரன் ஈஸ்வரன்