இந்திய அணி , ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது . இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளை விளையாடுகிறது. இதில் இந்தியா டி-20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அந்த டி- 20 தொடரில் தோனி , அணியில் இடம் பெறவில்லை. அதன் பிறகு நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடியது. 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று , வரலாற்று சாதனை படைத்தது. தோனி டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. தற்பொழுது ஒரு நாள் தொடர் வரும் ஜனவரி 12 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சிறப்பாக விளையாட தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் சிறப்பு பூஜை போட்டதாக கூறப்படுகிறது . அதை பற்றி இங்கு விரிவாக காண்போம் .
தோனி ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு செல்லும் முன்பும் தன் சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் தியோரி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர்களுக்கு முன்னதாக அவர் அந்த கோவிலுக்கு சென்று வழிபாடுகள் மேற்கொண்டுள்ளார்
கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல்-இல் தோனிக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. எனினும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரன் குவிக்க திணறினார் தோனி. இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில், தோனி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்களிடம் பெரும் எதிர் பார்ப்பு எழுந்துள்ளது . தோனி வரும் 2019 உலகக்கோப்பை போட்டிகளுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், டி20 அணியில் அடுத்த விக்கெட் கீப்பரை தேடுவதாக கூறி தோனிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனினும், நியூசிலாந்து டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் ஆட உள்ளார்.
முதலில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளார். முதல் ஒருநாள் போட்டி வரும் 12 ஜனவரி அன்று நடைபெற உள்ளது. 2019 உலகக்கோப்பைக்கு முன்பாக தோனி ஆடவுள்ள கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ஆஸி. - நியூசி. தொடர்கள் மட்டுமே. கடந்த ஆண்டு போல இல்லாமல் தோனி தன் கடைசி சில சர்வதேச போட்டிகளிலாவது அதிரடியை காட்ட வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தோனி ஆஸ்திரேலியாவில் சிறப்பான, தரமான சம்பவத்தை பேட்டிங்கில் நிகழ்த்தினால் மட்டுமே உலகக்கோப்பை தொடருக்கு எந்த அழுத்தமும் இன்றி செல்ல முடியும்.
மேலும், இந்திய அணியில் தோனியின் இடத்திற்கு பல வீரர்கள் போட்டியாக உள்ளனர். என்னதான் தோனி மூத்த வீரர் என்ற அனுபவ அடிப்படையில் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துவிடுவார் என்றாலும், தினேஷ் கார்த்திக் ஒருநாள் அணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டதை வைத்துப் பார்த்தால், தோனிக்கு லேசாக சிக்கல் இருப்பது போல தான் இருக்கிறது. எனவே இந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே , உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற முடியும் .