#2 2007 உலக கோப்பை பைனலின் கடைசி ஓவரை ஜோகிந்தர் ஷர்மாவுக்கு தந்தது ( Giving 2007 T20 final over to Joginder Sharma )
யாரும் எதிர்பாராத விதமாக 2007 உலக கோப்பை பைனலில் பரம எதிரிகளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினர். மீண்டும் மிஸ்பா தனி ஆளாக தன் அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுத்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், ஹர்பஜன் சிங்கிற்கு 1 ஓவர் இருந்த பொழுதும் , ஜோகிந்தர் மீது நம்பிக்கை வைத்து பந்தை தந்தார் தோனி. மிஸ்பா கடைசி ஓவரின் இரண்டாம் பந்தை சிக்கர் விளாச மைதானத்தில் டென்ஷன் எகிறியது. மிஸ்பா அடுத்த பந்தை ஸ்கூப் செய்ய முனைந்து பந்தை ஃபைன் லெக் திசையில் அடித்தார். ஷ்ரீ சாந்த் கேட்சைப் பிடித்தவுடன் ஒட்டு மொத்த இந்தியாவும் கோலாகலமாக மாறியது.
#1 2011 உலக கோப்பை பைனலில் நம்பர்-5 இல் களமிறங்கியது ( Promoting himself to number 5 in 2011 World Cup final )
2011 உலக கோப்பை பைனலுக்கு இந்தியா தகுதி பெற்ற உடனேயே எதிர்பார்ப்புகள் எல்லையை மீறி சென்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 274 ரன்கள் குவித்தது. சேசில் இந்தியா சேவாக் மற்றும் டெண்டுல்கரை விரைவாகவே இழந்தது. காம்பிருடன் இணைந்த கோஹ்லி இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தனர். ஆனால், கோஹ்லி தில்ஷனிடம் விக்கெட்டை பறிக்கொடுத்தார். யுவராஜின் வருகைக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நம்பர் 5-இல் களமிறங்கிய தோனி இலங்கை பவுலர்களை துவம்சம் செய்தார். இறுதியாக, சிக்சர் அடித்து தோனி உலக கோப்பை வென்றதை எந்த ஒரு இந்தியரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
எழுத்து - மாட் ஹாட்டர்
மொழியாக்கம் - அஜய்