நியூசிலாந்து அணியுடனான தொடரில் இந்திய அணி 4-1 என தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் மூலம் எம்.எஸ் தோனி மற்றும் யுஜ்வேந்திர சகால் புதிய உச்சத்தில் ஐசிசி ஓடிஐ தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர் .
இந்த தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஓடிஐ பௌலிங் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 3 வது இடத்தை பிடித்தார். ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் ரஷித் கான் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர் .
இந்திய பௌளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் யுஜ்வேந்திர சகால் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளனர் . யுஜ்வேந்திர சகால் 1 இடங்களில் முன்னேறி 5வது இடத்தையும், புவனேஸ்வர் குமார் 6 இடங்களில் முன்னேறி 17-வது இடத்தையும் பௌலிங் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளனர்.
பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடத்தை வகிக்கிறார். விராட் கோலி நியூசிலாந்து உடனான தொடரில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்குபெற்றார். கடைசி இரு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ் தோனி 2019 வருடம் மிகச் சிறந்த வருடமாக அமைந்துள்ளது. பேட்டிங் தரவரிசையில் 3 இடங்களில் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளார். கேதார் ஜாதவ் 8 இடங்களில் முன்னேறி 35வது இடத்தை பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா- பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்ற இமாம்-உல்-ஹக் 9 இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்தார். இவர் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி மொத்தமாக 271 ரன்களை குவித்தார். தென்னாப்பிரிக்கா அணியில் பேட்டிங் தரவரிசையில் குவின்டன் டிகாக் டாப் 10 இடத்தை பிடித்துள்ளார். இவர் ஓடிஐ பேட்டிங் தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளார். மற்ற மாற்றங்கள் என்னவென்று பார்க்கும் போது ஷான் மார்ஷ் 60வது இடத்திலிருந்து 43 வது இடத்தை பிடித்துள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் 32வது இடத்திலிருந்து 30வது இடத்தையும் பேட்டிங் தரவரிசையில் பிடித்துள்ளனர்.
நாம் இங்கு புதிய ஓடிஐ தரவரிசை பட்டியலை காண்போம் :
பேட்டிங் ரேங்க்கிங்
1 விராட் கோலி
2 ரோகித் சர்மா
3 ராஸ் டெய்லர்
4 ஜோ ரூட்
5 பாபர் அஜாம்
6 ஃபேப் டுயு பிளஸ்ஸி
7 ஷை ஹோப்
8 குவின்டன் டிகாக்
9 ஃபக்கர் ஜமான்
10 ஷிகார் தவான்
பௌலிங் ரேங்கிங்
1 ஜாஸ்பிரிட் பூம்ரா
2 ரஷித் கான்
3 டிரென்ட் போல்ட்
4 குல்தீப் யாதவ்
5 யுஜ்வேந்திர சகால்
6 முஷ்டபிசுர் ரகுமான்
7 ககிஷோ ரபாடா
8 அடில் ரஷித்
9 முஜிப் யுவர் ரகுமான்
10 ஜோஸ் ஹசில்வுட்
ஆல்-ரவுண்டர் ரேங்கிங்
1 ரஷித் கான்
2 ஷகிப் அல் ஹசன்
3 முகமது நபி
4 முகமது ஹபிஜ்
5 மொய்ன் அலி