ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தோனி

MSD
MSD

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி முழு உடற்தகுதியுடன் நியுசிலாந்து உடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதனை இந்திய அணியின் துனை பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் இன்று (பிப்ரவரி 2) உறுதி செய்துள்ளார்.

இந்தியா மற்றும் நியுசிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வெஸ்ட்பேக் ஆடுகளத்தில் நாளை (ஜனவரி 3) நடைபெறவுள்ளது. இந்திய அணி ஏற்கனவே 3-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட்டது. நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 91 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

தற்போதைய இந்திய அணியின் மிகவும் அதிக அனுபவ வீரர் எம்.எஸ்.தோனி தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாவது மற்றும் நான்காவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க தோனி முழு உடற்தகுதியுடன் உள்ளார் என சஞ்சய் பங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று தெரிவித்துள்ளார்.

37வயது மகேந்திர சிங் தோனி சமீபத்தில் இந்திய அணி விளையாடிய ஆஸ்த்ரெலிய ஒருநாள் தொடரில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் அரை சதங்களை விளாசி தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பான ஆட்டத்திறனை நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெளிபடுத்தினார் தோனி. நியுசிலாந்து உடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 33 பந்துகளில் 48 ரன்களை விளாசி இந்திய அணியின் இலக்கை 324 ஆக உயர்த்தினார்.

நான்காவது ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டரில் தோனியின் அனுபவத்தை இந்திய அணி அதிகமாகவே மிஸ் செய்தது. ஏனெனில் நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பயங்கரமாக சொதப்பியது. அம்பாத்தி ராயுடு , கேதார் ஜாதவ் , ஹர்திக் பாண்டியா , தினேஷ் கார்த்திக் போன்றோர் மிடில் ஆர்டரில் சரியாக விளையாடமல் சொதப்பியதால் இந்திய அணி 4வது ஒருநாள் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது.

இன்றளவும் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களையே ஒருநாள் போட்டிகளில் நம்பி வருகிறது. இந்திய தொடக்க வீரர்கள் சரியாக விளையாடினால் மட்டுமே மிடில் ஆர்டர் வீரர்களும் சிறப்பாக விளையாடுகின்றனர். அத்துடன் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் எதிரணியினரின் தொடக்க பௌளர்களின் பந்துவீச்சை கணித்து விளையாடுவதையும் தவறுகின்றனர்.

தோனி போன்ற அனுபவ வீரர்கள் விளையாட்டின் போக்கிற்கு ஏற்றவாறு தங்களது பேட்டிங்கை மாற்றி விளையாடும் திறமை உடையவர்கள் ஆவர். எனவே விராட் கோலி இல்லாத நிலையில் தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயமாக கை கொடுக்கும். அத்துடன் அவரது பேட்டிங் இந்திய மிடில் ஆர்டரில் ஒரு நல்ல முன்னேற்றத்தையும் அளிக்கும்.

தோனி தற்போது ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கு ஃபிட்-டாக இருப்பதால் தினேஷ் கார்த்திக் அல்லது அம்பாத்தி ராயுடு-விற்கு பதிலாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் 5வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக காலின் முன்ரோ நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

Quick Links