கேப்டன் தோனி மிகப்பெரிய பைக்குகளின் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தோனி ஒரு போட்டியின்போது மைதானத்திலிருந்து ஹோட்டலுக்கு பேருந்தை ஓட்டிச் சென்றிருக்கிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?.
தோனி கடந்த ஒரு வருடமாக சர்வதேச போட்டிகளில் தன் திறமைக்கேற்ப பெரிதாக சோபிக்காத நிலையில், பலதரப்பு மூத்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தோனி உலக கோப்பைக்கு முன்பாகவே ஓய்வு பெறவேண்டும் என வலியுறுத்தியவண்ணம் உள்ளனர். தோனி ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக அதிரடியாகக் களம் கண்டிருந்தார். விண்டேஜ் தோனி திரும்பிவிட்டதாகப் பலரும் சந்தோஷப்பட்டனர். சிஎஸ்கே-க்கு எதிரான ஓர் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி தோற்றபொழுது போஸ்ட் மேட்ச் பேட்டியில் இந்திய கேப்டனான விராட் கோலி கூறியதாவது "தோனி இது போன்ற வானவேடிக்கைகளை உலகக் கோப்பை வரை தொடர்ந்தால் எங்களுக்கு சாதகமாக அமையும்" எனத் தெரிவித்திருந்தார்.
ஐபிஎல்லுக்கு பின் நடந்த எந்த ஒரு போட்டியிலும் தோனி பெரிதாக சோபிக்கவில்லை, அவரது அதிரடி ஆட்டம் சற்று மந்தமாகவே காணப்பட்டது. ஐபிஎல்-இல் வானவேடிக்கை காட்டிய தோனி ஏன் சர்வதேச போட்டிகளில் ரன் எடுக்க தவறுகிறார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர் .
தோனியை சுற்றி பல்வேறு விஷயங்கள் நடந்து வந்தாலும், அவரைப் பற்றி தெரியாத விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது.
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பலர் தன் சுயசரிதையை வெளியிட்டு வரும் நிலையில். வி.வி.எஸ் லட்சுமணும் தன் சுயசரிதையை ‘281 and Beyond’ வெளியிட்டுள்ளார் .
இந்த சுயசரிதையில் லட்சுமண் தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பதிவிட்டுள்ளார். அவற்றில் தோனியை பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார் அதை காண்போம்
“2008 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த எனது நூறாவது டெஸ்ட் போட்டியில், தோனி விளையாட்டுத்தனமான விஷயங்களை செய்திருந்தார்” என கூறியுள்ளார். அதே டெஸ்ட் போட்டியில் தான் இந்திய சுழற்பந்து ஜாம்பவானான அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றார். அந்த போட்டிக்கு பிறகு தோனி கேப்டனாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
தனது சுயசரிதையில் மேலும் அவர் கூறியதாவது “ தோனியுடன் இருந்த தருணத்தில் ஒரு மறக்க முடியாத சம்பவம் என்னவென்றால் எனது நூறாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஹோட்டலுக்கு பேருந்தை ஓட்டிச் சென்றது தான். ஒரு இந்திய கேப்டன் ஹோட்டலுக்கு பேருந்தை ஓட்டிச் சென்றது மிகவும் வியப்பைத் தந்தது.”
மேலும் தோனியின் அலட்டிக்கொள்ளாத பண்பைப் பற்றியும், அவரது சாதுரியமான நிலைப்பாட்டை பற்றியும் லக்ஷ்மன் பதிவிட்டுள்ளார். “இந்திய அணி தோனி தலைமையில் இங்கிலாந்து மண்ணில் 4-0 என்று மோசமாக தொடரை இழந்திருந்தது அதற்கு பின்பு ஆஸ்திரேலியா மண்ணிலும் 3-0 என்று தொடரை இழந்த நிலையில் இருந்தபோது தோனி எவர்மீதும் கடிந்து கொள்ளாமல் அடுத்த போட்டியில் கவனம் செலுத்தி சாந்த நிலையை பின்பற்றி வந்தார், ஒரு இடத்தில் கூட அவர் தன் பொறுமையை இழந்து விரக்தி அடைய வில்லை” என்று லஷ்மன் பதிவிட்டுள்ளார்.
எனவே, தோனி இல்லாமல் ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டி20 போட்டிகளில் வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி களம் காண உள்ளது இந்தியா. தோனிக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.