தோனியின் தனிப்பட்ட ஐந்து பெரும் சாதனைகள்

DHONI WITH 2013 CHAMPIONS TROPHY
DHONI WITH 2013 CHAMPIONS TROPHY

‌இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக வெற்றி அடைந்த வீரர்களில் ஒரு மகேந்திர சிங் தோனி. இந்தியாவின் அனைத்து கால சிறந்த விக்கெட் கீப்பராகவும் விளங்குகிறார். கிரிக்கெட் உலகில் பல்வேறு வித சாதனைகளைக் கண்டுள்ளார் இந்த பெரும் வீரர். பத்தாண்டுகளுக்கு மேலாக இந்திய அணியைத் தமது தலைமையின் கீழ் திறம்பட வழிநடத்தியும் உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி கிரிக்கெட் உலகின் உச்சத்தை அடைந்தது.

இவரது தலைமையில் தான் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான உலகக்கோப்பைகளான 50 ஓவர், 20 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை வென்று தந்துள்ளார். இத்தகைய மூன்று கோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனியையே சாரும். மேலும், இவர் ஆசிய கோப்பைகளையும் வென்று தந்துள்ளார். குறுகிய கால கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அல்லாது, டெஸ்ட் போட்டிகளிலும் தன் கேப்டன் தந்திரத்தை நிரூபித்தார். இதனால், இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.

‌‌இந்த கேப்டன் தன் அணி பல சாதனைகள் புரிய வழிநடத்தினார், அதுவும் குறுகிய கால கிரிக்கெட் உலகில். கிரிக்கெட் உலகில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார், விக்கெட் கீப்பராக அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர் என இவரது சாதனைகள் அனைத்தும் நாம் அறிந்ததே. ஒரு உண்மையான தோனி ரசிகன் அவரின் சில சாதனைகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

‌இதோ அவ்வாறான தோனியின் தனிப்பட்ட சில சாதனைகளை நான் இங்கே பட்டியலிட்டு உள்ளன்.‌

5.அதிகமுறை ஒருநாள் போட்டிகளில் நாட்-அவுட் பேட்ஸ்மேன்:

DHONI LOOKING AGGRESSIVE ON FINAL MOST OVERS
DHONI LOOKING AGGRESSIVE ON FINAL MOST OVERS

‌‌அனைவரும் இவரைப் பார்த்து விரும்பவும் திகைக்கவும் செய்யக் காரணம் இவர் அணியை ஆட்டத்தின் இறுதி வரை வழிநடத்தி செல்லும் திறனே. ‌‌சில நேரங்களில் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்கள் விக்கெட்களை இழந்து அணி ஊசலாடும்போது தனி ஆளாய் களத்தில் நின்று வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்துள்ளார். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவற்றை விவரிக்க அவசியம் இல்லை. மேலும் தனது மின்னல் வேக ஸ்டம்பிங்குகள் மூலம் தனது முந்தைய சாதனையான 0.09 நொடிகள் என்னும் ஸ்டம்பிங் வேகத்தை 0.08 நொடிகளாகத் தானே முறியடித்து உள்ளார்.

கேப்டன் பணியைத் துறந்தபோதிலும் அவ்வப்போது களத்தில் கோலிக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார். அதில் வெற்றியும் காண்கிறார் என்பதை நாம் கண் முன்னால் பார்க்கிறோம். அவ்வப்போது கேதர் ஜாதவை அழைத்துப் பந்து வீசவும் செய்து, விக்கெட் விழவும் செய்கிறார். தோனி சில போட்டிகளில் இன்னிங்சின் இறுதிவரை அழைத்துச் சென்று ரன்களை குவித்து வெற்றிக்கண்டுள்ளார். இதுவே இவருக்கு ஒரு தனி சாதனையைத் தந்துள்ளது. 78 முறை நாட்அவுட் அடிப்படையில் தனிப்பெரும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். பின் வரிசை பேட்ஸ்மேன்களில் தனக்கு நிகர் எவரும் உலகில் இல்லையெனப் பல முறை நிரூபித்துள்ளார். வேறு எந்த பேட்ஸ்மேனும் இத்தகைய சாதனையை ஒருபோதும் செய்தது இல்லை.

4.ஒருநாள் போட்டிகளில் ஆறாவது வீரராகக் களமிறங்கி அதிக ரன்கள் குவித்தவர்:

MOSTOF HIS CAREER HE BATTING AT NO:6
MOSTOF HIS CAREER HE BATTING AT NO:6

‌பேட்டிங் வரிசையில் தனக்கென ஒரு நிலையான இடத்தை வைத்துக் கொள்ளாமல் அணியில் எந்த இடத்தில் இறங்கினாலும் தன் திறனை நிரூபிக்கும் ஒரே வீரர் தோனியே. இருப்பினும், தனது கிரிக்கெட் வாழ்வில் பெரும்பாலும் ஆறாவது வீரராகவே களம் இறக்கப்பட்டார்.

இவர் மூன்றாவது வீரராகக் களமிறங்கி பெரும் வெற்றிக்கண்டிருந்தாலும், அணி நிர்வாகத்தின் அறிவுறத்தலின் படி பின்வரிசை பேட்ஸ்மேனாகவே களம் காணப்பட்டார். தனக்கு கொடுக்கப்பட்ட கடின பணியான இறுதி ஓவர்களைக் கையாளும் வேலையைத் திறம்பட செய்து வெற்றிகளை மென்மேலும் குவித்தார்.

ஒருநாள் போட்டிகளில் இதுவரை, ஆறாவது வீரராகக் களம் கண்டு 125 இன்னிங்சில் 4024 ரன்களை குவித்து, சிறந்த ஆவரேஜான 46.79 வைத்துத் தான் எதற்கும் சளைத்தர் இல்லை என நிரூபித்தார். இதனாலேயே, இவர் ஒருநாள் போட்டிகளில் ஆறாவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை கைவசப்படுத்தி உள்ளார்.

3.ஐசிசியின் ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் அதிவேகமாக முதல் இடத்தை பிடித்த வீரர்:

HELICOPTER SHOT SPECALIST
HELICOPTER SHOT SPECALIST

தனது முதல் ஒருநாள் போட்டியில் ரன் கணக்கை துவங்காத தோனி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அனைவரையும் திகைக்க வைத்து, வெகு விரைவிலே வெற்றியடைந்தார்.அப்போது அணியின் வெற்றிக்கான இன்னிங்சை அவர் எதிர்நோக்கவில்லை.

பின்னர், இவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளில் ஒரு முக்கிய வீரராக உருபெற்றார். கூடிய விரைவில் இவர் தனது தரவரிசையை உயரத்தினார். வெறும் 42 போட்டிகளிலே இவர் ஐசிசியின் ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த வீரரானார். அதுவே அதிவேகமாக முதல் இடத்தை பிடித்த வீரர் என்ற சாதனையும் ஆனது.

2.ஏழாவது இடத்தில் களமிறங்கி அதிக சதங்கள் அடித்த வீரர்:

THE COOL CAPTAIN FOREVER
THE COOL CAPTAIN FOREVER

ஆசிய வெலன் அணிக்காக விளையாடிய தோனி ஏழாவது இடத்தில் களம் கண்டு சதம் அடித்தார். இவர் ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் மூன்றாவது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேனாகவே அறியப்பட்டார். இந்த ராஞ்சி பேட்ஸ்மேன் முன்வரிசையில் களம் காண்பதில் துரிதமாக செயல்பட்டார். ஆனால், காலப்போக்கில் இவர் பின்வரிசையில் அணிக்கு பலம் கூட்ட நினைத்தார். அதனாலே, பெரும்பாலும் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் களம் இறக்கப்பட்டார்.

எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் கீழ்வரிசையில் களமிறங்கி ரன்களை குவிக்கும்போது அசௌகரியங்கள் இருந்தாலும், தோனி அந்த இடத்தில் இறங்கி இரண்டு சதங்களை நொறுக்கினார். மேலும், அது உலக சாதனையாக இருக்கிறது. கடைசி தருவாயில் களம் கண்டு பந்துவீச்சாளர்களுடன் கைக்கோர்த்து ரன்களை குவிக்கும் கலையை நன்கு கற்றுத்தேறினார். எந்தவொரு பேட்ஸ்மேனும் ஏழாவது இடத்தில் இறங்கி இத்தகைய சாதனையை செய்ததில்லை.

1.ஒன்பது முறை ஆட்டத்தை சிக்ஸரில் முடித்த ஒரே வீரர்:

AFTER 28 YEARS INDIA WON THEIR SECOND WORLD CUP
AFTER 28 YEARS INDIA WON THEIR SECOND WORLD CUP

சிக்ஸர் அடிப்பதில் மலைக்கவைக்கும் திறன் கொண்டவர் தோனி. ஸ்டேடியத்திற்கு வெளியே பந்தை அனுப்புவதில் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் விரும்பச்செய்தவர் தோனி. ஒருநாள் போட்டிகளில் இதுவரை 218 சிக்ஸர்களை அடித்துள்ளார். இது ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச சிக்ஸர்கள். மேலும், இது ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் ஷாஹித் அப்ரிடி, கிறிஸ் கெயில் மற்றும் சனத் ஜெயசூர்யாவுக்கு அடுத்தபடியாக நாலாவது அதிகபட்சமாகும்.

இருப்பினும், உலகின் எந்தவொரு வீரரும் முடியாத ஒரு பிரத்யேக சாதனையை வைத்துள்ளார். அதுதான் ஒன்பது முறை ஆட்டத்தை சிக்ஸரில் முடித்த ஒரே வீரர்.இதில் குறிப்பிடும்படி அனைவராலும் விருப்பதக்க ஒன்று, 2011 உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக சிக்ஸர் அடித்து முடித்து வைத்ததே. இதனை இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், தான் இறப்பு என்று ஒன்று வருவதற்கு முன்னர் இந்த தோனி அடித்த இறுதியாட்ட சிக்ஸரை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்த பின் தான் இறப்பேன் என்று தோனியின் சிக்ஸரை புகழ்ந்துள்ளார்.

Quick Links

App download animated image Get the free App now