இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி தற்போது ராஞ்சியில் நடைபெற்ற உள்ளுர் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் இந்திய அணியில் விளையாடி வருகிறார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஜனவரியில் தான் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. அதனால் தோனி ஓய்வில் இருக்கும் போது புதிய விளையாட்டு ஏதேனும் ஒன்றை விளையாடுவார்.
தோனியின் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டின் திறமை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு தெரிந்ததாகும் . ஆனால் தற்போது டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்று , வென்று அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் .
தோனி ராஞ்சியில் நடைபெற்ற ஜே.எஸ்.சி.ஏ கன்ட்ரி கிரிக்கெட் கிளப் சேம்பியன் ஷிப்பில் கலப்பு இரட்டையர் பிரிவில் சுமிட் குமாருடன் பங்கேற்றார் .
தோனி மற்றும் சுமிட் குமார் இருவரும் சேர்ந்து இப்போட்டியில் வென்று சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். 6-3 & 6-3 என்ற செட் கணக்கில் தோனி & சுமிட் குமார் வென்றனர் .
தோனி சர்வதேச டெஸ்ட் தொடர் நடைபெறும் பொழுது பொதுவாக தனது குடும்பத்துடன் அல்லது இந்திய ராணுவ வீரர்களுடன் தனது நேரங்களை செலவிடுவார். ஆனால் தற்போது அணைவருக்கும் ஆச்சரியமுட்டும் வகையில் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வென்றும் காட்டியுள்ளார் .
சமூக வலைதளங்களில் முதலில் தோனியின் இந்த டென்னிஸ் புகைப்படத்தை பார்க்கும் போது யாரும் நம்பவில்லை . மார்பிங் செய்யப்பட்ட புகைபடம் என புரளி ஒரு பக்கம் கிளம்ப தொடங்கியது.
பின்னர் எம்.எஸ்.தோனி இந்த டென்னிஸ் தொடரில் பங்கேற்றதைப் பற்றி முழுவதுமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த டிவிட்டர் பக்கத்தில் சரியாக விளக்கியது .
தோனி தற்போது கிரிக்கெட் ஆட்டத்திறனில் இழந்துள்ளார் . கடந்த மாதங்களில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடர்களில் தோனி டி20 அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார் . ஏனெனில் இவ்விரு தொடர்களுக்கு முன் நடைபெற்ற இங்கிலாந்து டி20 தொடரில் தோனியின் ஆட்டம் அவ்வளவாக இல்லை. தோனியின் இந்த ஆட்டத்தால் இவரது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது போல் தெரிகிறது என ரசிகர்கள் அச்சமடைந்துள்ளனர் . ஆனால் தற்பொழுது தோனியின் முழு நோக்கம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 உலகக் கோப்பையில் பங்கேற்ப்பதுதான் .
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் அணைவரும் தோனியை பெரிதும் நம்புகின்றனர். அத்துடன் இந்திய ரசிகர்களின் பேராதரவு அவருக்கு எப்பொழுதுமே உள்ளது. அவர் இன்னும் நீண்ட வருடங்கள் தமது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர வேண்டும் என விரும்புகின்றனர் . சுனில் கவாஸ்கர், ஸ்டிபன் பிளம்பிங் , டுவைன் பிராவோ , ஹர்பஜன் சிங் போன்ற கிரிக்கெட் வீரர்களும் இந்திய உலகக்கோப்பை நாயகனுக்கு தங்களது பேராதரவை தெரிவித்து வருகின்றனர். இவருக்கு நிறைய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர் .
எழுத்து : சச்சின் அரோரா
மொழியாக்கம் : சதீஸ்குமார்