2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க 100க்கும் குறைவான நாட்களே உள்ளன. இந்த நிலையில் இந்திய அணிக்காக நான்காம் இடத்தில் யார் களம் இறங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ரெய்னா இதற்கு முன்பாக இந்தியாவிற்காக 2011-ம் ஆண்டு மற்றும் 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைப் பொறுத்தவரையில் வருகிற உலக கோப்பையில் இந்திய அணிக்காக நான்காம் இடத்தில் விளையாட தகுதியான ஒரே வீரர் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி. கடந்த ஒரு வருடமாக இந்திய அணிக்கு இந்த நான்காம் இடத்துக்கான வீரரை தேர்வு செய்வதில் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இன்று வரை இந்திய அணி இந்த இடத்திற்கான ஒரு தகுதியான வீரரை தேர்வு செய்யவில்லை.
இதனை குறித்து ரெய்னா கூறுகையில்
"கடந்த சில மாதங்களாக தோனி சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகிறார். என்னைப் பொறுத்தவரை உலக கோப்பையில் இந்திய அணிக்காக நான்காமிடத்தில் அட தகுதியான ஒரே வீரர் "
மேலும் அவர் கூறுகையில்
"தோனி மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்து வருகிறார். இதனால் என்னை பொறுத்தவரையில் உலகக்கோப்பையில் தோனி நான்காவது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய வேண்டும்’’
முன்னாள் இந்திய கேப்டன் தோனி நியூசிலாந்தில் கணிசமான ரன்களை குவித்துள்ளதாக ரெய்னா தெரிவித்தார். தோனியின் அறிவுரை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பேருதவியாக இருக்கிறது என்று கூறினார் ரெய்னா.
அவர் கூறுகையில்
‘‘சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் தோனி கணிசமான ரன்கள் அடித்துள்ளார். அதோடு இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்துகிறார். குறிப்பாக இளம் பந்து வீச்சாளர்களுக்கு தோனி அறிவுரை பயனுள்ளதாக இருக்கிறது.
தோனி அதிக அளவிலான ஏற்றம் இறக்கங்களை கண்டுள்ளார். பல உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ளார். ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்றுள்ளார். இப்படி இருக்கும்போது ஏன் இந்திய அணியுடன் உலகக்கோப்பை தொடருக்க அவர் செல்லக்கூடாது "
தோனியின் அனுபவம் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி தன்னால் முடிந்த மாற்றங்களை செய்து உலகக் கோப்பைக்கு பலமான அணியை தயார் செய்யும் என நம்பலாம்.
உலக கோப்பையில் இந்திய அணியின் முதல் போட்டி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜூன் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கவிருக்கிறது. விராட் கோலி கேப்டனாக களமிறங்கும் முதல் உலக கோப்பை போட்டி இது. கடந்த வருடம் இங்கிலாந்தில் ஒருநாள் டெஸ்ட் என ரன்களைக் குவித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலக கோப்பையிலும் அதிக ரன்களை குவித்து இந்திய அணிக்காக உலக கோப்பையை வாங்கி தருவார் என எதிர்பார்க்கலாம்.