கடைசி ஓவரில் ரன் எடுக்க மறுத்ததைப் பற்றி வெளிப்படையாக கூறியுள்ள தினேஷ் கார்த்திக் 

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இறுதியில் ஆடிய கார்த்திக் மற்றும் பாண்டியா இந்திய அணியை இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் கார்த்திக் 2 ரன்கள் எடுத்தார். இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தை அவர் வேகமாக அடித்தவுடன் எதிர்முனையில் இருந்த பாண்டியா ரன் எடுக்க ஓடி வந்தார் ஆனால் அவரை தடுத்து நிறுத்தி திரும்ப செல்லுமாறு கார்த்திக் கூறினார். கடைசி பந்தில் கார்த்திக் சிக்ஸர் அடித்தார் இருந்த போதிலும் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கார்த்திக்கின் இந்த செயலை சமூக ஊடங்களில் பலர் குறை கூறினார்கள். அவர்கள் கார்த்திகை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். இந்த நிலையில் கார்த்திக் ஏன் அந்த ரன் எடுக்க மறுத்தார் இந்த தகவலை வெளியிட்டார். இதனைக் குறித்து அவர் கூறுகையில்

"நானும், க்ருனல் பாண்டியாவும் சிறப்பாக விளையாடினோம். எதிரணி பந்துவீச்சாளர்களும் அழுத்தத்தில் இருந்ததால் வெற்றியை நெருங்கினோம். நான் சிக்சர் அடிக்க முடியும் என்று உண்மையிலேயே நம்பினேன். அதனால்தான் ஒரு ரன்னுக்காக ஓடவில்லை"

தமிழக வீரர் கார்த்திக் இதற்கு முன்னால் இக்கட்டான நிலையில் அபாரமாக விளையாடி வெற்றி பெற செய்துள்ளார். எனவே அந்த நம்பிக்கையின் காரணமாக நடந்து முடிந்த போட்டியிலும் அவரால் சிக்சர் அடித்து ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் அவ்வாறு செய்தார் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ரன் எடுக்க மறுத்து அவர் சிக்சர் அடித்து ஜெயித்திருந்தால் அவரை இந்தியா முழுவதும் கொண்டாடி இருப்பார்கள். அதற்கு மாறாக நடந்த காரணத்தினால் அனைவரும் அவரை குறை கூறுகின்றனர். இது ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையிலும் நடக்கக் கூடிய செயலாகும்.

மேலும் அந்த சூழலைப் பற்றி விவரிக்கும் பொழுது அவர் கூறியதாவது

"அந்தச் சூழலைத் திறமையாக எதிர்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்பினோம். அதில் என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று உண்மையாக நான் நம்பினேன். ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக, கடினமான சூழல்களில் பெரிய அளவிலான ஷாட்களை நம்மால் அடிக்க முடியும் என்று நமது திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல, உங்களது பாட்னர் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது முக்கியமானது. கிரிக்கெட் போட்டியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பவைதான்’’

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இதுபோன்று நடப்பது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற கடைசி ஓவரில் தோனி ரன் எடுக்க மறுத்தார். எதிர்முனையில் அப்பொழுது ஆடிய வீரர் ராயுடு. அந்தப் போட்டிக்கு பிறகு தோனியையும் பலர் குறை கூறினார்கள்.

நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பது இயல்பு.

Quick Links

App download animated image Get the free App now