தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டிலேயே இந்திய அணியில் அறிமுகமாகிவிட்டார். இருந்தாலும் மகேந்திரசிங் தோணியினால் இந்திய அணியில் தனது இடத்தை இழந்து சரியான இடம் கிடைக்காமல் பல ஆண்டுகளாக போராடினார். இருந்தாலும் அவ்வப்போது இந்திய அணியில் தலை காட்டி வரும் இவர் இன்று தான் தனது முதல் உலகக்கோப்பை போட்டியை விளையாடுகிறார். ஆனால் இவர் 2007 உலகக்கோப்பை அணியிலேயே இடம் பெற்றிருந்தார். பிறகு ஏன் இவருக்கு இந்த நிலை என்பதனை விரிவாக பார்ப்போம்.
தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு கிரிக்கெட் அணியில் இடம் பெறும் வீரர்கள் ஒருசிலரே . அந்த வகையில் தமிழக மக்கள் அனைவருக்கும் பரிட்சயமான வீரர் தான் தினேஷ் கார்த்திக். விக்கெட் கீப்பரானா இவர் தமிழக அணிக்காக முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணியின் யு-19 அணியில் இடம் பெற்று பின்னர் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். 2004 ஆம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு வகையான போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சில போட்டிகள் களமிறக்கப்பட்டார். ஆனால் இவர் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறியதால் இவருக்கு பதிலாக அணியில் தோணி இடம் பெற்றார். போகப்போக அவரே அந்த இடத்தை நிரந்தரமாகி விட்டார். 2007 ஆம் ஆண்டு அணியில் தோணி இருந்தாலும் தினேஷ் கார்த்திக் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டார்.
அப்போது நடைபெற்ற 2007 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் தினேஷ் கார்த்திக். ஆனால் துர்த்தாஷ்டவசமாக இந்திய அணி அந்த உலக கோப்பை தொடரில் லீக் போட்டிகளிலேயே வெளியேறியது. லீக் சுற்றில் இந்திய அணியானது வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்றதால் தினேஷ் கார்த்திக்கு அதில் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இருந்த போதிலும் இவர் ஒருநாள் போட்டிகளை காட்டிலும் டி 20 போட்டிகளில் இந்திய அணிக்காக அப்போதைய காலகட்டங்களில் முக்கிய வீரராக விளங்கினார். அதன் பின் நடைபெற்ற 2007 டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற இவர் பெரும்பான்மையான போட்டிகளில் விளையாடினார்.
அந்த தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. தோணி காயம் காரணமாக சில போட்டிகளில் ஓய்வளிக்கும் போது அவருக்கு பதிலாக இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
பல ஆண்டுகள் அப்படியே கழிந்தன. 2011, 2015 ஆகிய உலகக்கோப்பை தொடர்களில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. தற்போதைய உலகக்கோப்பை விளையாடும் இந்திய அணியின் வீரர்களில் முதன் முதலாக இந்திய அணியில் அறிமுகமான வீரர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் பொது இவர் அணியில் இடம் பெறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ரிஷாப் பந்த் தான் இடம் பிடிப்பார் என எதிர்ப்பர்க்கப்பட்டது. ஆனால் இந்த உலககோப்பையே தினேஷ் கார்த்திக்கு கடைசி உலகக்கோப்பை அதுமட்டுமல்லாமல் அனுபவம் வாய்ந்த வீரர் ஆகிய தகுதிகளை கருத்தில் கொண்டு இவருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது.
இவரது பெயரை இந்திய அணியில் அறிவிக்கும் போதே இவரை இந்திய அணியின் இரண்டாம் விக்கெட் கீப்பராக தான் தேர்வு செய்துள்ளோம். தோணி விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் இவர் அணியில் களமிறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடரும் துவங்கியது . முதல் 4 போட்டிகள் நிறைவடைந்தன. காயம் காரணமாக ஷிகர் தவான் அணியிலிருந்து விலகியதன் காரணமாக விஜய் ஷங்கர் தனது முதல் உலகக்கோப்பை போட்டியை விளையாடினார்.
அவருக்கு இந்திய அணியில் 2 முறை வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் எதையும் அவர் சரியாக பயன்படுத்தாத பட்சத்தினால் அடுத்த போட்டியில் ரிஷாப் பண்ட்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அப்போதுகூட தினேஷ் கார்த்திக்கின் பெயர் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. அந்த போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியடைந்தது. அதுவும் 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் இந்திய அணி வீரர்களான கேதார் ஜாதவ் மற்றும் தோணி ஆகியோரின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக தோல்வியடைந்தது.
இந்த தோல்வி பல தரப்பிலிருந்தும் சர்ச்சைகளை கிளப்பியது. "முயற்சி செய்து தோற்றிருந்தாலும் பரவாயில்லை ஆனால் அவர்கள் தான் முயற்சியே செய்யவில்லையே" என ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் பலரும் அவர்களின் மீது கொதித்தெழுந்தனர். அதுமட்டுமல்லாமல் அணியில் கேதார் ஜாதாவின் பங்கு என்னதான் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அவர் பந்துவீசுவதும் இல்லை. பேட்டிங்கிலும் பொறுப்பற்ற தனமாக விளையாடி வருகிறார். எனவே அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பளிக்கலாமே என பலரும் கூறி வந்தனர்.
இதன் விளைவாக இன்று நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டே உலககோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 2019-ல் தான் உலக கோப்பையில் அறிமுகமே செய்யப்படுகிறார் இவர். அதிக போட்டிகள் உலக கோப்பை போட்டிகளில் களமிறக்கப்படாமல் வெளியிலேயே உட்கார வைக்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகினர் இவர்.
அதாவது மொத்தம் 10 உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இவர் அணியிலிருந்தும் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. இத்தனை தடைகளையும் கடந்து இன்று தனது முதலாவது உலகக்கோப்பை போட்டியில் இடம் பிடித்துள்ளார் இவர். இந்த போட்டியில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இவருக்கு அடுத்தடுத்து வரும் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் எனவே அவர் இதனை உணர்ந்து இன்றைய போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.