அவருக்கு இந்திய அணியில் 2 முறை வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் எதையும் அவர் சரியாக பயன்படுத்தாத பட்சத்தினால் அடுத்த போட்டியில் ரிஷாப் பண்ட்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அப்போதுகூட தினேஷ் கார்த்திக்கின் பெயர் அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. அந்த போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியடைந்தது. அதுவும் 5 விக்கெட்டுகள் கைவசம் இருந்தும் இந்திய அணி வீரர்களான கேதார் ஜாதவ் மற்றும் தோணி ஆகியோரின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக தோல்வியடைந்தது.
இந்த தோல்வி பல தரப்பிலிருந்தும் சர்ச்சைகளை கிளப்பியது. "முயற்சி செய்து தோற்றிருந்தாலும் பரவாயில்லை ஆனால் அவர்கள் தான் முயற்சியே செய்யவில்லையே" என ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் பலரும் அவர்களின் மீது கொதித்தெழுந்தனர். அதுமட்டுமல்லாமல் அணியில் கேதார் ஜாதாவின் பங்கு என்னதான் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அவர் பந்துவீசுவதும் இல்லை. பேட்டிங்கிலும் பொறுப்பற்ற தனமாக விளையாடி வருகிறார். எனவே அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பளிக்கலாமே என பலரும் கூறி வந்தனர்.
இதன் விளைவாக இன்று நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டே உலககோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 2019-ல் தான் உலக கோப்பையில் அறிமுகமே செய்யப்படுகிறார் இவர். அதிக போட்டிகள் உலக கோப்பை போட்டிகளில் களமிறக்கப்படாமல் வெளியிலேயே உட்கார வைக்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராகினர் இவர்.
அதாவது மொத்தம் 10 உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இவர் அணியிலிருந்தும் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. இத்தனை தடைகளையும் கடந்து இன்று தனது முதலாவது உலகக்கோப்பை போட்டியில் இடம் பிடித்துள்ளார் இவர். இந்த போட்டியில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் இவருக்கு அடுத்தடுத்து வரும் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் எனவே அவர் இதனை உணர்ந்து இன்றைய போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.