தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமான இவரால் நீண்ட நாள் அந்த இடத்தை தக்க வைக்க முடியவில்லை. காரணம் மகேந்திர சிங் தோனி. அதற்கு பின் அவ்வபோது அணியின் தலையை காட்டி வரும் இவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. மகேந்திர சிங் தோனி-க்கு மாற்று வீரராகவே இவர் அணியில் விளையாடினார். ஆனால் தற்போது அவர் நிதாஷ் டிராபி இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தததின் மூலம் இந்திய ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் தினேஷ் கார்த்திக். அதற்கு பிறகு இவரின் கிரிக்கெட் வாழ்க்கை அப்படியே மாறியது. அதன் பின்னர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் அதிக சராசரி வைத்துள்ள வீரராகவும் திகழ்கிறார்.
தினேஷ் கார்த்திக் விளையாடிய உலக கோப்பை போட்டிகள்
2007 உலக கோப்பை தேர்வு செய்யப்பட்டார் களமிறக்கப்படவில்லை – இந்திய அணி லீக் சுற்றில் வெளியேறியது.
2007 ஆம் ஆண்டு நடைபெறற உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் விளையாடும் 11 பேரில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணி அந்த உலக கோப்பை தொடரின் லீக் சுற்றிலேயே வெளியேறியது. விளையாடிய 3 போட்டிகளில் பெர்முடா அணியை மட்டுமே வீழ்த்தி இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவியது இந்திய அணி. இதனால் ரசிகர்கள் இந்திய அணி வீரர்களின் உருவ பொம்மை எரித்தனர்.
2007 டி20 உலக கோப்பை களமிறங்கினார்- இந்திய அணி கோப்பையை வென்றது
இதற்கு பின் நடைபெற்ற 2007 டி20 உலக கோப்பை போட்டிகளில் மகேந்திர சிங் தோனி தலைமையில் களம் கண்டது இந்திய அணி. இதில் தினேஷ் கார்த்திக் முக்கிய வீரராக தேர்வு செய்யப்பட்டார். தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளில் முதல் போட்டி முதல் தற்போது வரை சிறப்பாக விளையாடி வருவது அனைவரும் அறித்ததே. எத்தனை பேருக்கு தெரியும் இந்திய அணியின் முதல் டி20 போட்டியின் ஆட்ட நாயகன் தினேஷ் கார்த்திக் என்று!!!
2007 டி20 உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் பெரும்பாலான போட்டிகளில் விளையாடினார். தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக இவர் பிடித்த கடினமான கேட்ச் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா இவருக்கு மாற்று வீரராக இறுதிப்போட்டியில் களமிறங்கினார். இருந்த போதிலும் இந்திய அணி இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
2013 சேம்பியன்ஸ் டிராபி தொடர் களமிறங்கினார் – இந்திய அணி கோப்பையை வென்றது.
பின்னர் 2013 ஆம் அண்டு நடைபெற்ற சேம்பியன்ஸ் டிராபி தொடரில் தினேஷ் கார்த்திக் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்தார்.
2017 சேம்பியன்ஸ் டிராபி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் களமிறக்கப்படவில்லை – இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றது.
2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற சேம்பியன்ஸ் டிராபி தொடரில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின்னர் மணீஷ் பாண்டே காயம் காரணமாக விளகியதால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் அந்த தொடரில் பயிற்சி ஆட்டத்தை தவிர வேறு எந்த ஆட்டத்திலும் களமிறக்கப்படவில்லை.
தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் முக்கிய வீரராக களமிறக்கப்படுகிறார். இவர் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இவருக்கு உலக கோப்பை அணியின் இடமுண்டு.