"ஒருநாள் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக்கின் எதிர்காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது"- சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து

Sanjay Manjrekar
Sanjay Manjrekar

முன்னாள் கிரிக்கெட் வீரரும் மற்றும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தினேஷ் கார்த்திக்கின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் ஏறக்குறைய முடிந்துவிட்டது என்று பிரபல இணையத்தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டி மற்றும் ஐந்து ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இவர்களுக்கான டி20 தொடர் வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் முடிந்த உடன் இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் வருகிற மார்ச் மாதம் முதல் வாரம் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இந்திய அணியின் தேர்வுக்குழு இந்த தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படவில்லை இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாறாக கடந்த தொடர்களில் சிறப்பாக ஆடாத ராகுல் அணிக்கு மீண்டும் திரும்பினார்.

இந்திய தேர்வு குழு வாரியம் அறிவித்த ஒருநாள் போட்டியில் விவரங்கள்.

ஒரு நாள் தொடரில் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், சித்தார்த் கவுல், கே.எல்.ராகுல்

கடைசி 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, விஜய் சங்கர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்.

தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்க படாது குறித்து கிரிக்கெட் நிபுணர்களும் மற்றும் ரசிகர்களும் அதிருப்தி தெரிவித்து வரும் இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கார்த்திக்கின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது என்ற கருத்தை தெரிவித்துள்ளார் .

Dinesh Karthik
Dinesh Karthik

இதனை தனியார் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது

" தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்படாதது அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும். ஏனெனில் அவருக்கு அளித்த வாய்ப்புகளை அவர் சரியாகப் பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இருந்தபோதிலும் தேர்வுகுழு கார்த்திகை தேர்வு செய்யாததன் மூலம் நமக்குத் தெரிவிப்பது என்னவென்றால் டி20 கிரிக்கெட்டில் உள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. எனவே அவரது ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது "

இந்திய ரசிகர்களின் இந்த கருத்தை மறுத்தாலும் அவர்கள் தினேஷ் கார்த்திக் வருகிற டி20 தொடரில் சிறப்பாக ஆடி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என நம்பிக்கை வைத்துள்ளனர். தினேஷ் கார்த்திக் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து விதமான சர்வதேச போட்டியில் ஓரளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து அவரை ஓரம் கட்டுவது சரியான முடிவாக தெரியவில்லை.

Quick Links

Edited by Fambeat Tamil