தினேஷ் கார்த்திக் செய்தது சரியா ? தவறா ?

New Zealand v India - ODI Game 3
New Zealand v India - ODI Game 3

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி போராடி தழுவிய தோல்வியால் அந்த தொடரை 2-1என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்தியாவின் தொடர் வெற்றிகள் முடிவுக்கு வந்தன. ரோஹித் சர்மா கேப்டனாக தோற்கும் முதல் தொடர் இதுவே. அனைத்து வடிவிலான போட்டிகளில் இந்தியாவின் தொடர் வெற்றியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது இந்த டி20 தொடர். இதற்கு முன் இந்திய அணி ஆஸ்திரலியாவில் 71 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றியும் ஆஸ்திரேலியா நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர் போட்டிகளை வென்று மிரள வைத்தது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் பேச்சுக்கு உள்ளானார் நமது அணியின் தினேஷ் கார்த்திக். அவர் கடைசியாக எடுத்த முடிவில் சில இந்திய ரசிகர்கள் திகைத்து போய் விட்டனர் என்றே சொல்லலாம். ஆம் அந்த போட்டியில் நியூஸிலாந்து அணியால் நிர்ணயிக்க பட்ட இலக்கான 213 என்ற இமாலய இலக்கை இந்திய துரத்தி பிடித்து கொண்டிருந்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா நிதானமாக ஆட மறுமுனையில் அனைவரும் அதிரடியாக ஆடினர். விஜய் ஷங்கர் 43 ரன்களும் ரிஷப் 28 ரன்களும் அதிரடியாக சேர்த்து வெளியேறினர். காப்பாற்றுவார் என எதிர்பார்க்க பட்ட நமது அணியின் காப்பான் தல தோனி சொற்ப ரன்களில் வெளியேற இந்தியாவின் நம்பிக்கையும் குறைந்தது. பின்னர் நிலைத்து ஆடிய ரோஹித் ஷர்மாவும் 38 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ஹர்திக் பாண்டியா தனது பங்குக்கு 21 ரன்கள் அடித்து வெளியேறினர்.

இந்திய அணிக்கு 28 பந்துகளில் 68 தேவை பட்ட போது இணைந்தனர் தினேஷ் கார்த்திக்கும் க்ருனால் பாண்டியாவும். தங்களது திறமையான மட்டை வீச்சால் இலக்கை எட்டும் தூரத்திலேயே வைத்து கொண்டனர். இருவரும் சேர்ந்து சிக்ஸர் மழை பொழிந்தனர். இருவரும் இலக்கை எட்ட வைத்து விடுவார்கள் என்று எண்ணியபோது ஒரு பெரிய திருப்பம் காத்திருந்தது.

6 பந்துகளில் 16 ரன்கள் தேவை பட்டபோது டிம் சவுதி பந்து வீச வந்தார். 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால். 4 பந்துகளில் 14 ரன்கள் என்று இந்தியா மீது பதட்டம் தொற்றி கொண்டது. மூன்றாம் பந்தை தரையில் அடித்த தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுக்காமல் க்ருனால் பாண்டியாவை திருப்பி அனுப்பிவிட்டார். இதை கண்ட இந்திய ரசிகர்கள் திகைத்து போய் விட்டனர். க்ருனால் பாண்டியாவிற்கு ஸ்டரைக்கை கொடுக்காமல் தானே வைத்து கொண்டார். அந்த முடிவு பெரிதும் சர்சைக்குள்ளானது. ஆம் பின்னர் வந்த மூன்று பந்துகளையும் சவுதி நேர்த்தியாக வீச இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தினேஷ் கார்திக்கினால் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தர முடியவில்லை. அதற்கு அந்த முடிவும் ஒரு காரணமாக அமைந்தது.அந்த பந்தில் ஒரு வேளை தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்திருந்தால் இடது கை மட்டை வீச்சாளரான க்ருனால் பாண்டியாவிற்கு சவுதி சில அகல பந்துகளை வீசி இருக்கலாம். இல்லையென்றால் பாண்டியாவே பந்தை 6 ரன்களுக்கு விலாசியும் இருந்திருக்கலாம். நன்றாக ஆடி கொண்டிருந்த பாண்டியாவிடம் ஒரு ரன் எடுக்க மறுத்ததால் மிகவும் சர்ச்சைக்குள்ளான பேச்சுக்குள்ளானார் தினேஷ் கார்த்திக்.

தோனி போல் அணியின் சுமையை எடுக்க நினைத்த தினேஷ் கார்த்திக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. அணியின் சுமையை சுமக்க நினைத்தது தவறல்ல அதை பின்னர் செய்யாமல் விழ்ந்ததே தவறு. க்ருனால் பாண்டியாவால் முடியாமல் போய் இருந்தாலும் தினேஷ் கார்த்திக் அந்த தருணத்தில் அந்த ரன்ணை எடுத்திருக்க வேண்டும்.

இந்த முடிவு இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே அளித்தது. இதனால் மட்டுமே இந்திய தோர்த்து விடவில்லை. மோசமான பந்து வீச்சும் ஒரு காரணமே. சில இக்கட்டான நிலைமைகளில் எடுக்கும் சிறு முடிவே கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.

Edited by Fambeat Tamil