கோலி பயப்பட கூடும்! அவ்வளவு ஏதுவாக அவரை விட்டுவிடாதீர்கள் - ஆஸ்திரேலியா அணிக்கு பாண்டிங் அறிவுரை

India Test Headshots Session
India Test Headshots Session

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். முன்னெப்போதுமில்லாத அறிவுரைகள் மற்றும் ஆட்டத்தை எதிர்கொள்ளும் அணுகுமுறைகள் என்று பல முன்னாள் ஜாம்பவான்களிடமிருந்து வந்து கொண்டிருக்கின்றன.

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் போட்டி வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதனிடையே ஒரு பேட்டியில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் வரலாற்றில் அதிக உலக கோப்பையை வென்ற கேப்டனுமான ரிக்கி பாண்டிங் கூறியதாவது “அவர்(கோலி) ஒரு சிறந்த வீரர் . ஆனாலும் , அவர் பல இடங்களில் பயம் கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதை நான் கண்டிருக்கிறேன். எனவே ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷத்துடன் பந்துவீசினால், கோலி பேணி காப்பார்” என்று தெரிவித்தார்

மேலும் “மிட்செல் ஜான்சன் கோலியை பலமுறை தனது அசுர பந்து வீச்சினாலும், கண்ணியமான உடல் தோற்றத்தினாலும் பதட்டமடைய வைத்துள்ளார். ஆகவே கோலியிடம் பொறுமையாக இருந்தால் அவர் எதிரணி வீரர்களை கேலிக்கூத்து செய்துவிடுவார்” என்றும் தெரிவித்தார்

ஆஸ்திரேலியா வீரர்கள் சொந்த மண்ணில் ஆக்ரோஷமாக ஆட வேண்டும் என்று கூறிய அவர் “ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில், கிரிக்கெட் ஆக்ரோஷமாக தான் ஆடப்படுகிறது, எனவே இத்தொடர் ஒன்றும் விதிவிலக்கல்ல” என்று கூறினார்

பாண்டிங் ஆடிய காலத்தில் ஆஸ்திரேலிய அணி சிம்ம சொப்பனமாக விளங்கியது. டெஸ்ட் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் நம்பர் ஒன்னாக இருந்தது ஆஸ்திரேலிய அணி

கோலியிடம் வார்தைப்போர் அறவே வேண்டாம் :

“ஆக்ரோஷ பந்துவீச்சு இல்லாமல், வார்த்தைகளுடன் விளையாடுவது சரியானதல்ல, எதிரணி வீரர்கள் நம் நாட்டுக்கு வந்திருக்கின்றனர், எனவே வார்த்தைகளில் கவனம் செலுத்தாமல் ஆக்ரோஷ ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்” எனவும் கூறினார்

முன்னிருந்த ஆஸ்திரேலியா அணி வார்த்தைப் போரில் ஈடுபட்டது பற்றி அவர் கூறியதாவது “ஆஸ்திரேலியா கிரிக்கெட் பொருத்தவரை வார்த்தை போர் என்பது எப்போதும் இருக்கும், பெரும்பாலும் பவுலிங்கின் ஆக்ரோஷத்தை வைத்தே அவ்வாறு செய்வர். ஆட்டத்தில் ஈடுபாடின்றி அவ்வாறு செய்ய இயலாது” என்று கூறினார்

கோலியை எளிதில் வீழ்த்த வேண்டும் என்றால் “ஒருவர் தன் ஆட்டத்தில் முழு ஈடுபாட்டுடன் இருந்து, சரியான திறன்களை பயன்படுத்தினால் அவரை எளிதில் வீழ்த்த முடியும்” என்று கூறினார்.

இந்திய அணி கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் அணி தரவரிசையில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

கோலிக்கு பிரஷர் புடிக்கும் :

“ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்ற அழுத்தம் கோலியிடம் உள்ளது. அழுத்தத்தின் காரணமாக கோலி நன்றாக ஆட கூடும், பிரஷர் சூழ்நிலைகளில் கோலி நன்றாக ஆடுவது அனைவரும் அறிந்ததே, அதில் பெரும்பாலும் வெற்றியை தான் காண்பார்” என தெரிவித்தார்

“இந்திய அணிக்கு, தொடருக்கு முன்பு பல சுய சவால்கள் இருக்கின்றன. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை, அணியில் உள்ள மூன்று ஸ்பின்னர்களும் திறன் வாய்ந்தவர்களே, அஸ்வின் ஜடேஜா போன்றோர் சொந்த மண்ணில் நன்றாக பந்துவீச கூடியவர்கள், ஆஸ்திரேலியா களத்தில் சற்று மந்தமாகவே காணப்பட்டனர். எனவே இந்தியா குல்தீப் யாதவுடன் போவது நல்லது” எனக் கூறினார்