அனைவருக்கும் உள்ள ஒரு நீண்ட கால ஆசை என்றால் அவர்கள் விருப்பப்பட்ட அனைத்து நாட்டு அணி வீரர்களும் ஒன்றாக இணைந்து விளையாடினால் எப்படி இருக்கும் என்பதே ஆகும். இத்தகைய எண்ணம் எனக்கும் தோன்றியது. இது போன்ற ஒரு சிறந்த ஒருநாள் போட்டிகளின் கனவு அணியைத் தேர்வு செய்யக் காரணமாகவும் அமைந்தது.
இந்தக் கனவு அணியில் தற்போதுள்ள ஒரு நாள் போட்டிகளில் சிறந்த வீரர்கள் இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில், நான் ஒவ்வொரு நாட்டிலும் இருந்து தலா ஒரு சிறந்த வீரரையே தேர்ந்தெடுத்துள்ளேன். உதாரணத்திற்காக, இப்பொழுது இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் நான் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் தான் தேர்ந்தெடுக்க முடியும். மேலும் ஒரு எடுத்துக்காட்டு, தற்போது உள்ள தென்னாபிரிக்க அணியில் ஹசிம் அம்லா, ரபாடா போன்றோர் சிறப்பாகச் செயல்பட்டு வந்திருக்கின்றனர். ஆனால் இங்கு ஒரு வீரர் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அவ்வகையில், பல சிறந்த விக்கெட் கீப்பர்கள் உள்ளதால் நான் இங்கு தோனியை கூட உலக கனவு அணியில் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும்.
இந்த கனவு அணியில் ஜிம்பாப்வே, வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, போன்ற நாடுகள் உள்ளடங்கும். இதில் எந்தெந்த வீரர்கள் எந்த இடத்தில் அவர்களுக்கு தக்கவாறு இடம்பெற்றுள்ளனர் என்பதை பின்வருமாறு காண்போம்.
தொடக்க ஆட்டக்காரர்கள் :
1. ரோஹித் சர்மா
தற்போது இந்திய அணியில் தொடக்க தூணாக இருக்கும் ரோஹித் சர்மா உலக அளவில் ஒரு சிறந்த ஆட்டக்காரராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களும் ஒருநாள் போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ரன்களையும் குவித்துள்ளார். இவர் 7454 ரன்களை குவித்து என்ற 47.78 சிறந்த ஆவ்ரேஜூம் வைத்துள்ளார். இவர் தற்போது ஒருநாள் தர வரிசைப்படி இரண்டாமிடம் வகிக்கிறார்.
2. பகார் ஜமான்
இந்த பாகிஸ்தானிய தொடக்க ஆட்டக்காரர் ஒருநாள் போட்டி உலகின் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர் ஆவார். இவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்துள்ளார்.2017-இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொரில் அறிமுகம் கண்ட இவர், தொடர்ந்து நான்கு போட்டிகளில் முறையே 31,50,57,114 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.இவரின் கன்னி சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் அணி 338 ரன்களை குவித்து அந்த தொடரின் இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் வெல்ல காரணமாய் இருந்தது.மேலும், இவரே அந்த இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
3. மார்டின் கப்டில்
இந்த நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் , 2015-இல் நடைபெற்ற உலக கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 237* என்ற மலைக்க வைக்கும் ஸ்கோரை அடித்து சாதனை படைத்தார்.இதுவே உலகக்கோப்பை தொடரின் ஒரு போட்டியில் தனிநபர் அதிகபட்சமாகும். இவர் 5976 ரன்களை குவித்து என்ற 42.99 சிறந்த ஆவ்ரேஜூம் வைத்துள்ளார்.
4. ஹசிம் அம்லா
இந்த தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த வீரர் ஆவார்.பலமுறை விராட் கோலியின் சாதனைகளை முறியடித்துள்ளார்.தென்னாப்பிரிக்கா அணி இன்னும் ஒரு உலகக்கோப்பையை கூட வென்றதில்லை. அந்த தாகத்தை தீர்த்து வைக்கும் வீரராக இவரை ரசிகர்கள் இன்னும் நம்புகின்றனர்.
5. டேவிட் வார்னர்
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 178 ரன்கள் குவித்து மிரட்டினார்.அந்த உலகக்கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாகவும் இவர் செயல்பட்டார்.பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனை பெற்ற போது ஒருநாள் போட்டியில் ஒரு சிறந்த வீரர் ஆகவே இருந்துள்ளார். ஆகையால் நான் இவரை தேர்ந்தெடுத்துள்ளேன்.
6. எவின் லீவிஸ்
எதிரணியை தனது மிரட்ட வைக்கும் சிக்சர்களால் மயக்க வைத்து பலமுறை தனது அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இவரது உச்சபட்ச ரண்களான 176* என்பதே போதும் இவர் ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்பதற்கான சான்றாகும்.இவர் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் இலங்கைக்கு எதிரான தனது முதலாவது ஒரு போட்டியில் 15 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உட்பட 148 ரன்களை குவித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.