மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் :
1. கனே வில்லியம்சன்
இவர் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். மேலும் இவர் நியூசிலாந்து அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். இவர் ஆட்டத்தில் மூன்றாம் களவீரராக இறங்கி விளையாடி வருகிறார்.இவர் பல பெரிய அளவிலான ஸ்கோர்களை அடிக்க தவறினாலும், தொடர்ந்து ரன்களை குவித்து ஒரு நிறைவான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார்.பிரண்டன் மெக்கல்லம் ஓய்வுக்கு பிறகு, இவரே அணியின் முழுநேர கேப்டனாகவும் செயல்பட்டு பல வெற்றிகள் அடைய உறுதுணையாக இருந்து வருகிறார்.இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களின் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.
2. பாபர் அசாம்
இந்தப் பாகிஸ்தான் இளம்புயல் பல சிறந்த ஆட்டங்கள் ஆடித் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று வருகிறார். இவர் தற்போது உள்ள ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஐந்தாம் இடம் வகித்து வருகிறார்.நவீன கால தலைமுறையின் இளம் கிரிக்கெட் வீரராக உள்ளார் இந்த பாபர் அசாம்.சில மூத்த வீரர்கள் இவரை இந்தியாவின் விராத்கோலியுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.இவர் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டரில் முதுகெலும்பாக உள்ளார்.
3. பாப் டூபிளிசிஸ்
இந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தன் திறனை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். இவர் 10 சதங்களையும் 29 அரைச்சதங்களையும் அடித்து சாதனை படைத்து வருகிறார்.இவர் 2014-ஆம் ஆண்டு தொடர்ந்து மூன்று சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.அனைத்து மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் அவர்களது சொந்த மண்ணில் மூன்று வடிவிலான போட்டித்தொடரையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்தார்.
4. ஸ்டீவன் ஸ்மித்
இவர் ஒரு லெக் ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கி முழுநேர பேட்ஸ்மேனாக அணியில் தன்னை மெருகேத்தியுள்ளார்.2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி மகுடம் சூட அணிக்கு ஒரு துருப்புச்சீட்டாய் விளங்கினார்.மேலும், இவர் அதே ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரர் என்ற விருதையும் பெற்றார்.ஆஸ்திரேலியா கேப்டன் தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்து தண்டனை பெற்றாலும் தற்போதும் விளையாடக்கூடிய கைதேர்ந்த பேட்ஸ்மேன் ஆவார். வார்னரை குறிப்பிட்டுள்ளதால் இவரை தேர்ந்தெடுக்க இயலாது.
5. விராட் கோலி
இவர் அனைத்து மூன்று வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் தன் திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். முன்னாள் வீரர்களின் சாதனைகளை முறியடித்து வருகிறார். சர்வதேச வீரர்களில் அதிக சதங்கள் அடித்த வீரராகவும் உள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்கக் கூடிய திறன் பெற்றவர் என்றும் புகழப்படுகிறார். ஏற்கனவே நான் அணியில் ரோகித் சர்மாவை குறிப்பிட்டுள்ளேன், இருந்தாலும் அவரைக் காட்டிலும் ஒரு சிறந்த வீரர் இவரே ஆவார் .
6.பிரெண்டன் டெய்லர்
2015 உலகக் கோப்பையில் நான்காவது அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.உலக கோப்பை தொடரில் 410 ரன்களை வெறும் 6 ஆட்டங்களில் அடித்து தனது திறனை வெளிப்படுத்தினார். இவர் ஒருநாள் போட்டிகளில் 6156 ரன்களும் பத்து சதங்களும் குவித்து தான் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என நிரூபித்துள்ளார்.
விக்கெட் கீப்பர்கள் :
1. முஷ்பிகுர் ரஹீம்
தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ரன்களை குவித்து வங்கதேச அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் இந்த முஷ்பிகுர் ரஹீம். நன்கு போராடக் கூடிய திறன் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லக்கூடிய இவர் வங்கதேச அணியின் உலக கனவு வீரராக இடம்பெற வாய்ப்பும் உள்ளது. விக்கெட் கீப்பிங் பணியிலும் இவரது சாதனை போற்றத்தக்கது.
2. ஜோஸ் பட்லர்
தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு சிறந்த பினிஷராக வலம் வருகிறார், இந்த இளம் ஜோஸ் பட்லர். இவர் இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பிங்கில் பல போட்டிகள் வந்தாலும் குறுகிய கால கிரிக்கெட்டில் தானே சிறந்தவர் என நிரூபித்து வருகிறார். இவர் 153 கேட்ச்களையும் 25 ஸ்டம்பிங்குகளையும் தனது விக்கெட் கீப்பிங் பணியால் எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்
3. மகேந்திர சிங் தோனி
உலகில் உள்ள அனைத்து விக்கெட் கீப்பர்களில் சிறந்தவர் தோனி. தனது. இவரது மின்னல்வேக ஸ்டம்பிங் பல வீரர்களை ஆட்டமிழக்கச்செய்து உலக ரசிகர்களை ஈர்த்துள்ளார். நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள போல 2 இந்திய வீரர்களை விட ஒரு சிறந்த வீரர் தோனி தான். ஏனெனில் பலமுறை தனது தலைமையில் அணிக்கு பல கோப்பைகளை வென்று தந்துள்ளார்.
4. சர்பராஸ் அகமத்
2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இவரது தலைமையில் தான் சாம்பியன் கோப்பையை வென்றது.மேலும் இவர் தனது விக்கெட் கீப்பிங் பணியால் 96 கேட்ச்களையும் 23 ஸ்டம்பிங்குகளையும் செய்து அசர வைத்துள்ளார். மேலும் அணிக்கு இவரது இறுதிநேர பேட்டிங்கால் பலமுறை வெற்றியும் கிடைத்துள்ளது.இம்ரான் கானுக்கு அடுத்தபடியாக ஐசிசியின் கோப்பையை வென்ற இரண்டாவது பாகிஸ்தான் கேப்டன் என்ற சாதனையை தனதாக்கினார்.
ஆல்ரவுண்டர்கள் :
1.பென் ஸ்டோக்ஸ்
இவர் 2011-ஆம் ஆண்டே தனது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் கண்டாலும், பிற்காலத்தில் தான் அணியில் நிரந்தரமாக இடம்பிடித்தார்.தற்போதுள்ள தலைமுறையின் சிறந்த ஆல்ரவுண்டராக கருதப்படுபவர், பென் ஸ்டோக்ஸ். இவர் சில முறை ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வீரராகவும் விளங்கி வருகிறார். இவர் 1963 ரன்களையும் 58 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.
2.முகமது நபி
தற்போதுள்ள அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஒரு சிறந்த ஆட்டக்காரராக குறிப்பாக ஆல்ரவுண்டராக தன்னை நிரூபித்து வருகிறார் நபி. இவர் 2435 ரன்களையும் என்ற 29.0 ஆவ்ரேஜூம் வைத்துள்ளார் மேலும் 114 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து கால் பதிக்க காரணம் இவரின் பங்கு தான் என்றும் சொல்லலாம் .
3. ஹர்திக் பாண்டியா
தனது பேட்டிங் திறமையால் அணியை பலமுறை வெற்றி பெறச் செய்துள்ளார், இந்த இந்திய ஆல்ரவுண்டர். மேலும் இவரது பந்துவீச்சு பல பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது .கடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா தோற்றபோதிலும் சளைக்காமல் 76 ரன்களை குவித்தார்.இந்திய அணியில் நான் பல வீரர்களை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதால் இவரை தேர்வு செய்ய இயலாது.
4. ஷகிப் அல் ஹசன்
சர்வதேச அளவிலான போட்டிகளின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் பலமுறை வகித்துள்ளார், இந்த வங்கதேச ஆல்ரவுண்டர். இவர் அணிக்கு ஏற்றவாறு பேட்டிங் வரிசையில் பல்வேறு இடங்களில் இறங்கி அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். மேலும் இவரது சுழல் பந்து வீச்சால் 244 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். இந்த கனவு அணியில் வெறும் 2 ஆல்ரவுண்டர்கள் மட்டுமே இடம் பெறுவர் அந்த வகையில் பார்த்தால் இவருக்கு நிச்சயம் இடம் உண்டு.
5. ஏஞ்சலோ மேத்யூஸ்
இவர் தற்போது உள்ள சர்வதேச ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஏழாம் இடம் வகிக்கிறார். இவர் 5380 ரன்களையும் 114 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.2010-இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 107 / 8 என்ற நிலையில் தவித்து கொண்டிருந்த வேளையில் 9-வது விக்கெட்டிற்கு லசித் மலிங்காவுடன் கைக்கோர்த்து 132 ரன்கள் என்ற மிகப்பெரிய பார்டனர்ஷிப்பை உருவாக்கி அணியின் வெற்றிக்கு உதவியதால் அனைவராலும் பாராட்டப்பெற்றவர், இந்த மேத்யூஸ்.அந்த போட்டியில் 127 பந்துகளில் 77 ரன்களை குவித்தார்.