சுழல் பந்துவீச்சாளர்கள் :
1. குல்தீப் யாதவ்
இந்த இடது கை சுழல் பந்துவீச்சு தாக்குதலால் பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் குல்தீப் யாதவ். இவர் 33 இன்னிங்சில் 67 விக்கெட்களை சாய்த்து, தான் சுழல் பந்துவீச்சில் சளைத்தவன் அல்ல என்றும் நிரூபித்து உள்ளார். இந்த கனவு அணியில் இடம்பெற மாட்டார் என்றாலும் ஒரு சிறந்த தற்போதைய சுழற்பந்துவீச்சாளர் என நான் குறிப்பிட்டுள்ளேன்.தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கிறார் .குல்திப் யாதவ் ஒரே வருடத்தில் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே ஆட்டத்தில் ஐந்து விக்கெட்களை எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2. இம்ரான் தாஹிர்
பாகிஸ்தானில் பிறந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் இந்த லெக் ஸ்பின்னர், 151 விக்கெட்களை வெறும் 91 ஆட்டங்களில் எடுத்துள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் 3 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் இவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கிறார் .இவர் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களில் ஏழு விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரரும், அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய தென்னாப்பிரிக்க பந்தவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
3. சாஹல்
ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து தனது திறனை வெளிப்படுத்தி இந்திய கிரிக்கெட் அணியில் குறுகியகால பந்துவீச்சாளர்களில் சிறந்தவராக திகழ்கிறார் இந்த லெக் ஸ்பின்னர். இவர் ஒருநாள் போட்டி தரவரிசையில் 5-வது சிறந்த பந்துவீச்சாளராக உள்ளார். இந்த கனவு அணியில் இவரும் இடம்பெறப்போவதில்லை.
4. ரஷீத் கான்
தற்போதுள்ள குறுகிய கால கிரிக்கெட்டில் சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாது உள்ளூர் போட்டிகளிலும் தனது திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் இந்த ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் . இவர் மிக இளம் வயதிலே 100 விக்கெட்களை வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரர்.14.5 என்ற சிறந்த பவுலிங் ஆவ்ரேஜையும் வைத்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் வெறும் இரு வீரர்களை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளதால் நிச்சயம் இந்த கனவு அணியில் இவருக்கு இடம் உண்டு.
வேகப்பந்து வீச்சாளர்கள்
1. ஜஸ்ப்ரிட் பும்ரா
ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தற்போது முதலிடம் வகித்து வருகிறார் இந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர். இந்திய அணியின் பேட்டிங்கில் விராட் கோலி எவ்வாறு செயல்படுகிறாரோ அது போல தான், பந்துவீச்சில் இவரது தாக்குதல் போற்றத்தக்கது. இவர் 5 போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.இவரும் இந்த கனவு அணியில் இடம்பெறவில்லை.
2. மிட்செல் ஸ்டார்க்
2015 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற இந்த ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் 145 விக்கெட்களை வெறும் 75 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். தனது துல்லிய யார்க்கர் தாக்குதலால் பல பேட்ஸ்மேன்களை நிலைகுலையச்செய்து 22 விக்கெட்களை கைப்பற்றி அந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவிச்சாளரானார்.பலமுறை காயங்களால் அவதிப்படும் இவர் சர்வதேச போட்டிகளில் இடம்பெறாவிட்டாலும் ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
3.டிரென்ட் போல்ட்
சர்வதேச தரவரிசையில் நான்காமிடம் வகிக்கும் இந்த நியூசிலாந்து பந்துவீச்சாளர் நான்கு முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களையும் தனது ஸ்விங் பந்துவீச்சால் வீழ்த்தியுள்ளார்.இவர் இருமுறை ஐந்து விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கைப்பற்றிய 7 / 34 என்பதே ஒருநாள் போட்டிகளில் இவரது சிறந்த பந்துவீச்சாகும்.
4. ஹசன் அலி
இந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வெறும் 41 போட்டிகளில் 75 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் இவர் தற்போதைய சர்வதேச தரவரிசையில் 13- வது இடத்தில் உள்ளார்.இவர் கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 13 விக்கெட்களை கைப்பற்றி அதிக விக்கெட்களை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்து, தொடர் நாயகன் விருதை வென்றார்.அதுவே இவரின் முதல் ஐசிசி தொடராகும்.
5. ரபாடா
தனது முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களை சாய்த்து உலக சாதனை படைத்த இந்த தென்னாப்பிரிக்கா இளம்புயல்.மேலும், முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலே ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பந்துவிச்சாளரானார். 93 விக்கெட்களை வெறும் 57 போட்டிகளில் எடுத்துள்ளார். இவர் தற்போதுள்ள சர்வதேச தரவரிசையில் நான்காமிடம் வகிக்கும் பந்துவீச்சாளர் ஆவார்.
இறுதிப் பட்டியல்:
மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் ஒரு நாட்டிற்கு தலா ஒரு வீரர் என்ற வீதத்திலும் ஒரு கனவு உலக XI அணியை தயாரித்துள்ளேன் அதன் பட்டியல் வருமாறு,
1. ஆஸ்திரேலியா- டேவிட் வார்னர்
2. மேற்கிந்திய தீவுகள் - எவின் லீவிஸ்
3. இந்தியா - விராட் கோலி (C)
4. ஜிம்பாப்வே - பிரண்டன் டெய்லர்
5. இலங்கை - ஏஞ்சலோ மேத்யூஸ்
6. இங்கிலாந்து - ஜோஸ் பட்லர்(WK)
7. வங்கதேசம் - ஷகிப் அல் ஹசன்
8. ஆப்கானிஸ்தான் - ரஷீத் கான்
9. நியூசிலாந்து - டிரென்ட் போல்ட்
10. பாகிஸ்தான் - ஹசன் அலி
11. தென்னாபிரிக்கா - ரபாடா