ஒருநாள் போட்டிகள் 1971 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. டெஸ்ட் போட்டிகள் முதலில் இருந்து விளையாடி வந்தாலும் அதன் பின்பு ஒருநாள் மற்றும் டி20 போன்ற போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. 1971 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன, பின்பு போட்டியின் அதிகாரிகள் ஓவருக்கு 8 பந்துகள் வீதம் தலா 40 ஓவர்கள் போட்டியை விளையாட முடிவு செய்தனர். இதுவே முதல் ஒருநாள் போட்டியாக கருதப்படுகிறது.
இதன் பின்பு, இப்போட்டியானது பல விதிமுறைகளைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியின் மூலம் பல அணிகளிலிருந்தும் பல ஜாம்பவான்கள் பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர்களாக உருவெடுத்துள்ளனர்.
இவ்வகையான போட்டியில் அனைவருக்கும் ஒரு கனவு அணி இருக்கும், இவற்றில் எனது கனவு அணியை பற்றி பார்க்கலாம்.
#1. சச்சின் டெண்டுல்கர்
ஒருநாள் வரலாற்றில் வெற்றிகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். ரசிகர்கள் இவரை கிரிக்கெட்டின் கடவுள் என அழைப்பதுண்டு. பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் தனது திறமையை சில சமயங்களில் நிரூபித்துள்ளார், எந்தவொரு அணியிலும் இவரது மதிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கும்.
ஒருநாள் வரலாற்றில் அதிக போட்டிகள் (463), அதிக ரன்கள் (18426), அதிக சதங்கள் (49), அதிக அரைசதம் (96), மற்றும் நிறைய ஆட்டநாயகன் விருது (62), போன்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார் சச்சின்.
#2. சனத் ஜெயசூர்யா
ஜெயசூர்யா, அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன இவர் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். மிகவும் அதிரடியாக ஆடக்கூடிய இவர் முதல் 15 ஓவர்களில் பவர்பிளேவின் மூலம் வேகமாக ரன் சேர்ப்பவர். 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.
445 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 13,430 ரன்கள் சேர்த்துள்ளார். இவரை தவிர மற்றொரு ஜாம்பவனான கில்க்ரிஸ்ட் சிறந்த துவக்க வீரர் என்றாலும் ஜெயசூர்யா பந்துவீச்சில் 323 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டர் ஆன இவர் அணிக்கு பந்துவீச்சிலும் உதவிகரமாக இருப்பதன் மூலம் அணியில் எளிதாக தேர்வாகிறார்.
#3. விராட் கோலி
தற்பொழுது உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக உள்ள விராட் கோலி எனது அணியில் மூன்றாவது வீரராக தேர்வாகிறார். ஆம், கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து பேட்ஸ்மேன்களில் சிறந்தவராக ஆதிக்கம் செலுத்தி வரும் இவர், பல சாதனைகளை செய்தும், முறியடித்தும் வருகிறார்.
அனைத்து வித போட்டிகளிலும் சிறந்து விளங்கும் இவர் ஒருநாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார், 216 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 10,232 ரன்களை சேர்த்துள்ளார். சராசரி 59.84 ஆகும், சதங்களில் 38 சதங்கள் அடித்துள்ளார், இவர் சச்சின் சாதனையை முறியடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
30 வயதே ஆன கோலி சேசிங் செய்வதில் வல்லவர் ஆவார். அவர் ஓய்விற்க்கு முன்பு பல சாதனைகளை முறியடித்து கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் ஆவாரென எதிர்பார்க்கலாம்.