#6 எம் எஸ் தோனி (வி.கீ) (கே)
கேப்டன், விக்கெட் கீப்பிங், பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் தோனி. ஒருநாள் போட்டிகளின் வரலாற்றின் சிறந்த பினிஷர்களுல் ஒருவர் ஆவார். இவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்று தந்துள்ளார்.
இவரது பேட்டிங் மட்டுமின்றி கேப்டனாக வியூகம் அமைப்பதில் வல்லவர். கீப்பிங்கிலும் உலக அளவில் பல சாதனைகளை கொண்டுள்ளார்.
321 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ள இவர், 10,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளர். இவர் பெரும்பாலும் 5-6 ஆம் இடத்தில் களமிறங்கியே இவ்வளவு ரன்களை சேர்த்த காரணத்தால் ரசிகர்கள் முந்தைய காலங்களில் விளையாடுவது போல் 3 ஆம் நிலையில் தொடர்து விளையாடி இருந்தால் 14,000 ரன்களை எட்டியிருப்பார் என்ற கணித்துள்ளனர். எனது அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பரும் இவரே.
#7. லான்ஸ் க்லூஸ்னர்
இவரது காலங்களில் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மென்களில் ஒருவர் ஆவார். இவர் இருக்கும் வரை தென்னாபிரிக்கா அணி எந்த இலைக்கையும் எட்டும் நம்பிக்கையை பெற்றிருந்தது. 1999 ஆம் உலககோபையில் இவரது ஆட்டம் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும், இத்தொடரில் தொடர் நாயகன் விருதும் பெற்றார்.
அட்டதின் கடைசி கட்ட இடங்களில் அசத்தும் இவர், ஓய்வு பெறும் பொழுது இவரது சராசரி 41.1 ஆக இருந்தது. ஸ்ட்ரைக் ரேட் 89.2 ஆகும்.
பேட்டிங் மட்டுமின்றி பவுலங்கிலும் 171 போட்டிகளில் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#8. வாசிம் அக்ரம்
ஒருநாள் வரலாற்றில் சிறந்த பவுலர்களில் ஒருவராவார் வாசிம் அக்ரம். இவரது ஸ்விங் பவுலிங் திறமையால் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரர் அக்ரம். 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அக்ரம் 502 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கில் கவனம் செலுத்திய இவர் 6 அறைசதங்களுடன் ஓய்வு பெற்றார்.