#9. பிரெட் லீ
சிறந்த பவுலர்களாக இருந்தாலும் பிரெட் லீயிடம் வேகம் என்பது மிகவும் அதிகம். வேகத்துடன் துல்லியமாக பந்து வீசுவதில் வல்லவர்.
ஒருநாள் வரலாற்றில் அதிவேக 300 விக்கெட்களை எடுத்தவர் பிரெட் லீ. தனது காலகளில் பல முன்னனி பேட்ஸ்மேன்களை தடுமாற செய்தார்.
221 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய லீ 380 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இரண்டாவது அதிகபட்சம் ஆகும். பவுலிங் அதிவேகமாக இருந்தாலும் இவரது எக்கனாமி 5 க்கும் குறைவாகும்.
#10. முத்தையா முரளிதரன்
கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் வெற்றிகரமான பவுலர் ஆவார் முரளிதரன். இவரை அணியில் எடுக்காமல் இருக்க இயலாது. பேட்ஸ்மேன்களில் சச்சினை போன்று பவுலிங்கில் இவரது சாதனைகளை முறியடிப்பது கடினமே.
350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 534 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் வரலாற்றில் இதுவே அதிகமாகும். இவரது எக்கனமி 4 ரன்களுக்கும் குறைவு.
அனைத்து நாட்டு மண்ணிலும் சிறப்பாக செயல்படும் இவர் பல பேட்ஸ்மென்களை தனது துல்லியமான சூழலில் வீழ்த்தியுள்ளார்.
#11. கிளென் மெக்ராத்
மெக்ராத் மிகவும் துல்லியமான வேக பந்துவீச்சாளர் ஆவார். அவரிடம் ப்ரெட் லீ போல் வேகம் இல்லை எனினும் தனது துல்லிய நுட்பம் மூலம் பேட்ஸ்மேன்களை திணற வைப்பார். பொதுவாக அனைத்து பேட்ஸ்மேன்களும் பந்து ஆஃப் ஸ்டம்பிர்க்கு மேல் செல்லும் பொழுது தடுமாறுவது உறுதி, அதை தனது பலமாக மாற்றிக்கொண்டார் மெக்ராத்.
250 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 381 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு அதுவே அதிகபட்ச விக்கெட்டுகள் ஆகும். இவரது எக்கனாமி 3.88 ஆகும்.
இவர் கடைசியாக பங்கேற்ற 2007 உலகக்கோபையில் தொடர் நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.