2014-15 பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் புஜாராவை கைவிடுவதற்கான தைரியமான முடிவை கோஹ்லி எடுத்தார். 3வது இடத்தில் ஸ்கோரிங் ரேட்டை அதிகரிக்க புஜாராவின் மெதுவான ஆட்டம் பொருத்தமாக இருக்காது என்பதற்காக இந்த முடிவை எடுத்தார்.
கோஹ்லி ஒரு ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர் ஆவார், அவர் வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார், அனைத்து போட்டிகளிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்துகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆட்டத்தின் நிலைமையை மதிப்பிடுவது, நேரத்திற்கு ஏற்ப ஆடுவது, எதிர்ப்பை எதிர்த்து நிற்பது மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை அவர் அறிந்திருக்கவில்லை என்பதை அவர் உணர்ந்தார்.
புஜாரா 2015-ஆம் ஆண்டு அணியில் நிரந்தரமாக இடம் பெறாமல் இருந்தார். மற்ற அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இந்திய பிரீமியர் லீக் விளையாடுவதில் கவனம் செலுத்தியபோது, பூஜாரா இங்கிலாந்திற்கு சென்று யார்க்ஷயர் அணிக்காக விளையாடினார். அவர் அந்த தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். டெஸ்ட் போட்டியில் பல நுணுக்கங்கள், விளையாடும் விதம் அறிந்து புதிய அனுபவம் கொண்டு வலுவான திறமையுடன் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பினார்.
வாய்ப்பு எதிர்பார்த்திருப்பதைக் காட்டிலும் விரைவில் வந்துவிட்டது. முரளி விஜய் காயமடைந்ததால், 2015 ஆம் ஆண்டின் நடுவில் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு புஜாரா தேர்வு செய்யப்பட்டார். அவர் யாரும் நம்ப முடியாத வகையில் 145 ரன்கள் எடுத்தார். இறுதியில் அவரது பேட்டிங் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றார்.
ஆனால் அவர் வைத்திருந்த கடின உழைப்பு எல்லாம் குறுகிய காலம் மட்டுமே இருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 2016-ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்திற்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. கோஹ்லி ஐந்து பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாட முடிவு செய்தார். அதனால் ஒரு பேட்ஸ்மேன் வெளியேறினார். கோஹ்லி மீண்டும் மீண்டும் பூஜாராவின் குறைந்த ஸ்கோரிங் ரேட்டை சுட்டிக்காட்டினார்,
அணிக்கு திரும்புவதற்கான நேரம் இதுதான் என்று புஜாரா அறிந்திருந்தார். 2016-17 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தவுடன், அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார், மேலும் நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தென்னாபிரிக்காவின் சுற்றுப்பயணத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றாலும் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த மூன்று டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஒரு பகுதியாக அவர் அரை சதத்தை அடித்தார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்திய அணி மேலாண்மையை இந்திய பிரீமியர் லீக் 2018 தொடரில் சிறப்பாக விளையாடியிருந்த கே.எல். ராகுலை தேர்வு செய்தது.
விஜய்யின் மோசமான ஆட்டத்தின் காரணமாக பூஜாரா கடைசியாக அணிக்கு நுழைந்தார், சவுத்தம்ப்டனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு முனையில் தனது விக்கெட்களை பறிகொடுத்தாலும் மறுமுனையில் பூஜாரா சிறப்பாக விளையாடி 132* ரன்கள் அடித்தார். ஆனால் அந்த தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், புஜாரா சிறப்பாக விளையாடியிருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புஜாரா மூன்று சதங்கள் அடித்து அவரது திறமை மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தேவையான நீளமான வடிவமைப்பிற்கு ஏற்றவாறு ஆடும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
புஜாரா ஒருமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணி 350 முதல் 400 ரன்களுக்கு மேல் ஆஸ்திரேலியாவில் உள்ள நிலையில் எடுக்கமுடிந்தது. புஜாரா அணியில் இருக்க வேண்டும் என்பதற்க்கான காரணத்தை கோஹ்லி தற்போது அறிந்திருப்பார்.
உண்மையில் பூஜாரா 2015 ல் தனது அணிக்கு திரும்பியதில் இருந்து, இந்தியாவின் அனைத்து வெளிநாட்டு தொடர்களிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடியிருந்தார். 2014 ஆம் ஆண்டிலிருந்து அவர் அனுபவித்த சோதனைகள் அவரை மேலும் வலுப்படுத்தியது. அவர் சவால்களை எதிர்கொண்டு அவரது வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திகொண்டார்.
விராத் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் அவர் நிச்சயமாக வருத்தத்தை ஏற்ப்படுத்தும் ஒரு விஷயம் புஜாராவை ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை அணியிலிருந்து நீக்கியது தான்.
எழுத்து: ஸ்ரீ சேர்த்தன்
மொழிபெயர்ப்பு: சுதாகரன் ஈஸ்வரன்