உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலிக்கு மிகுந்த நெருக்கடியை எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் அளிப்பார்கள் என ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார் . ஆஸ்திரேலியா அணியின் மும்மூர்த்திகளான ஸ்டார்க், ஹசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய வீரர்களால் விராட் கோலியை எளிதாக வீழ்த்துவோம் என்று கருத்து தெரிவித்து உள்ளார் .
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் , 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மழை காரணமாக டி20 போட்டிகள் 1-1 என டிரா ஆனது . 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது . இந்நிலையில் சென்ற முறை இந்தியா ஆஸ்திரேலிய தொடரை 0-2 என இழந்தது எனினும் விராட் கோலி தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு சதங்களுடன் அவர் 692 ரன்கள் குவித்தார் . இதில் சராசரி 86.50 என்பது குறிப்பிடத்தக்கது .
கிரிக்கெட் உலகில் விராட் கோலி ஒரு தலைசிறந்த வீரராக உள்ளார். எப்பொழுதும் ஏதாவது ஒரு தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் முன்னாள் வீரர்கள் மற்றும் எதிரணி வீரர்கள் , தங்களின் பலவீனத்தை எதிரணி வீரர்களுக்கு தெரியப்படுத்தம் வகையில் எதிரணியில் உள்ள சிறந்த வீரரை வம்புக்கு இழுக்கும் வகையில் ஏதேனும் ஒரு கருத்தை தெரிவிப்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது .
இந்நிலையில் விராட் கோலியை எங்களுடைய மும்மூர்த்திகள் கொண்ட படை கட்டுப்படுத்தும் என ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் அதிரடியாக தெரிவித்துள்ளார். இது குறித்து டிராவிஸ் பேசுகையில் எங்களுடைய அணி பந்து வீச்சாளர்கள் இந்திய வீரர் விராட் கோலியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது .
மேலும் " பந்து வீச்சாளர் ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் , பேட் கம்மின்ஸ் ஆகிய மூவரும் இந்திய தொடருக்காக எவ்வளவு கடின பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதுவே கோலிக்கு போதுமான நெருக்கடியை கொடுக்க முடியும் . இந்த உலகத்தில் எல்லோருமே மனிதர்கள்தானே மேலும் விராட் சிறந்த வீரர் என்பது எங்களுக்கும் தெரியும்".
"நான் அவரை பெங்களூருவில் தான் முதன்முதலாக பார்த்தேன். அவர் மிக சிறப்பான வீரர். ஆனால் கோலியை வீழ்த்தக்கூடிய வகையில் எங்கள் அணியில் நாங்கள் பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம் .எங்கள் அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களின் குழுக்களில் ஒன்றாவர். உள்ளுர் தொடர்களில் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட வைத்து சிறப்பாக தயார் செய்து வைத்துள்ளோம். அத்துடன் எங்கள் அணியின் சிறந்த டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் " நாதன் லியோன் " அணிக்கு மிகுந்த பக்க பலமாக இருப்பார். மேலும் இந்த போட்டி மிகவும் சிறப்பான போட்டியாக இருக்கப்போகிறது . அத்துடன் நாங்கள் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியாவை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எங்கள் அணியினருக்கு உள்ளது’’ என்றும் கூறியுள்ளார் .
எழுத்து : ஆம்னி ஸ்போர்ட்ஸ்
மொழியாக்கம் : சதீஸ்குமார்