தொடர்ந்து 8 முறை டாஸ் வென்ற ஜோ ரூட் - ட்விட்டரில் கலாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள கொழும்பு சிங்கள விளையாட்டுக் கழக மைதானத்தில் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். ஏற்கனவே முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 211 ரன்கள் மட்டும் 57 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை கிரிக்கெட் அணியை இங்கிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றதன் மூலம் 27 வயதான இளம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் தொடர்ந்து 8ஆவது முறையாக டாஸ் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடர் விளையாட காத்துக்கொண்டு இருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் தொடர்ந்து 8ஆவது முறையாக டாஸ் வென்றதை பற்றி விமர்சித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது .

"Annnndddd Joe Root wins his 8th toss in a row, yes England have played some awesome cricket, but such a winning streak with the toss is incredible. Dear match referees please check the coins you dish out #EngvSL"

ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டர் பதிவு
ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டர் பதிவு

ட்விட்டர் பதிவின் தமிழ் ஆக்கம் - "ஜோ ரூட் தொடர்ந்து எட்டு முறை டாஸ் வென்று உள்ளார். இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை ஆடி வருகின்றனர். அது மட்டுமின்றி, அவர்களின் டாஸ் வெற்றி நம்பமுடியாத அளவிற்கு உள்ளது. அன்பு போட்டி நடுவர்களே, டாஸ் போடும் நாணயத்தில் ஏதேனும் தவறு உள்ளதா என்று கண்டு பிடியுங்கள்" என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை டெஸ்ட் தொடர் போட்டிக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியிடம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினர். அந்த டெஸ்ட் தொடர் முழுவதும் அதாவது 5 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்றார்.

இந்திய கிரிக்கெட் அணியிடம் 5 முறை இப்போது இலங்கை கிரிக்கெட் அணியிடம் 3 முறை மொத்தம் 8 முறை தொடர்ந்து டாஸ் வென்று சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5 முறை இங்கிலாந்து அணியிடம் டாஸ் தோற்றது மூலம், அவரும் ரவிச்சந்திரன் அஸ்வின் போல் விளையாட்டாக என்ன கூறினார் என்றால் - "டாஸ் போடப்படும் நாணயத்தில் இரண்டு பக்கமும் தலை இருந்தால் மட்டுமே நான் டாஸ் வெல்ல முடியும்" என்று கூறினார்.

இலங்கை தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியிடமும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்றால் தொடர்ந்து 11 முறை டாஸ் வென்றுள்ளார் என்ற சாதனைக்கும் பெருமைக்கும் உள்ளவார்.

App download animated image Get the free App now