பாகிஸ்தான் அணி உலககோப்பை தொடருக்கு முன்னர் இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் மற்றும் ஒரு டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஒரு டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஷாம், பக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக் போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தனர். இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் புதிய வீரராக அறிமுகம் ஆனார். இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதே போல் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றும் பாபர் ஆஷாம் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பக்கர் ஜமான் 7 ரன்னில் டாம் கர்ரன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய இமாம் -உல்-ஹக் வந்த வேகத்தில் அறிமுக வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் 7 ரன்னில் அவுட் ஆகினார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார் பாபர் ஆஷாம்.
அதன் பின்னர் களம் ஹாரிஸ் சொகைல் பாபர் ஆஷாம் உடண் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடியாக விளையாடிய ஹாரிஸ் சொகைல் அரைசதம் விளாசிய நிலையில் 50 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய ஆஷிப் அலி ரன்அவுட் ஆகி வெளியேற அவரை தொடர்ந்து நிலைத்து விளையாடிய பாபர் ஆஷாம் 65 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சரிடம் ரன்அவுட் ஆகினார்.
அதன் பின்னர் வந்த இமாத் வாசிம் நிலைத்து விளையாட பாஹிம் அஷ்ஃராப் 17 ரன்னில் கிறிஸ் ஜார்டன் பந்தில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 173-6 ரன்கள் அடித்தது.
அதன் பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் டக்கெட் இருவரும் களம் இறங்கினர். டக்கெட் வந்த வேகத்தில் 9 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். மறுமுனையில் நிலைத்து விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் 36 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஜோ ரூட் மற்றும் கேப்டன் மோர்கன் இருவரும் நிலைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் 47 ரன்னில் ஹசான் அலி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஜோ டென்லி நிலைத்து விளையாடி அதிரடியாக விளையாடிய கேப்டன் மோர்கன் அரைசதம் விளாசினார். மோர்கன் 29 பந்துகளில் 57 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
19.2 ஓவரில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி வீழ்த்தி இந்த டி-20 தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைபற்றியது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கேப்டன் மோர்கன் தேர்வு செய்யப்பட்டார்.