பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஒரு டி-20 போட்டி மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. உலககோப்பை தொடர் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணி உலககோப்பை தொடருகான முன்னேட்டமாக இந்த தொடர் கருதப்படுகிறது. இந்த இரு அணிகளும் விளையாடிய டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் முதல் ஒரு நாள் போட்டி கடந்த 8ம் தேதி மழையால் ரத்தானது. அதை தொடர்ந்து நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் களம் இறங்கினர். தொடக்க ஜோடி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 115 ரன்களை குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பேர்ஸ்டோ 51 ரன்னில் ஷாஹீன் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஜோ ரூட் ராய் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜேசன் ராய் 87 ரன்னில் ஹசன் அலி பந்தில் அவுட் ஆகினார்.
அடுத்து களம் இறங்கிய கேப்டன் மோர்கன் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்த ரூட் 40 ரன்னில் யாஷிர் ஷா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மோர்கன் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பட்லர் ஐபிஎல் போட்டியை போலவே சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 160 ரன்கள் குவித்தது. பட்லர் 55 பந்தில் 110 ரன்கள் குவித்தார். அதில் 9 சிக்ஸரும் அடங்கும். கேப்டன் மோர்கன் 71 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 373 ரன்களை குவித்தது.
அதன் பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றும் இமாம் -உல்-ஹாக் இருவரும் தொடக்கத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள் சேர்த்தது. இமாம் -உல்-ஹாக் 35 ரன்னில் மோயின் அலி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த பாபர் ஆஷாம் பக்கர் ஜமானுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய பக்கர் ஜமான் தனது நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார். பக்கர் ஜமான் 138 ரன்னில் கிரிஸ் வோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார்.
அதன் பின்னர் வந்த ஆஷிப் அலி மற்றும் பாபர் ஆஷாம் இருவரும் 51 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஷர்ஃப்ராஸ் அகமது நிலைத்து விளையாடினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க இங்கிலாந்து அணியின் பக்கம் ஆட்டம் மாறியது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6 ரன்கள் மட்டுமே எடுக்க இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.