1000 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்கள்

Pravin
Anderson and broad
Anderson and broad

மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள பார்படாஸில் நடைபெற்றது. இதில் மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது . இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது மேற்கு இந்திய தீவுகள் அணி. மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹொல்டர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இந்த வெற்றியானது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது . இந்த போட்டியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு சாதனையை படைத்துள்ளனர். அது என்ன என்பதை இங்கு பார்போம் .

இங்கிலாந்து அணியின் முத்த மற்றும் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்கள் என்றாலே நினைவிற்கு வருபவர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் இருவரும் தான். இவர்கள் தற்போழுது நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் தனது 2 வது விக்கெட்டை எடுக்கும்போது டெஸ்ட் அரங்கில் சக வீரர் ஸ்டுவர்ட் ப்ராடுடன் இணைந்து 1000 வது விக்கெட்டை பதிவு செய்தார். ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் இருவரும் (570+433) = 1003 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர். இந்த இணை தான் இம்மைல் கல்லை எட்டிய ஓரே ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர் .

Anderson
Anderson

ஆண்டர்சன்

ஆண்டர்சன் முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். ஆன்டர்சன் இது வரை 146 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 570 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இவர் வீழ்த்திய டெஸ்ட் விக்கெட்களில் 65% சேட்ச்களும் , 21% ப்வுல்ட் , 14 % lbw முறையிலும் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஆண்டர்சன் இதுவரை அதிக முறை ஆஸ்திரேலியாவின் சிட்டுலே 11 முறையும், ஆஸ்திரேலியாவின் கிளார்க் 9 முறையும், சச்சின் டெண்டுல்கர் 9, வார்னரை 9 முறையும் வீழ்த்தி உள்ளார். ஆண்டர்சன் சிறந்த பவுலராக இங்கிலாந்து அணிக்கு திகழ்ந்து வருகிறார். 15 ஆண்டுகள் மேல் இங்கிலாந்து அணியின் முன்னனி பவுலராக உள்ளார் .

Stuart broad
Stuart broad

ஸ்டுவர்ட் ப்ராட்

ஸ்டுவர்ட் ப்ராட் இது வரை 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் . இதுவரை 433 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இவர் இதுவரை 16 முறை 4 விக்கெட்களையும், 16 முறை 5 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியவிற்கு எதிரான போட்டியில் ஹாட் ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மீண்டும் 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஹாட் ரிக் எடுத்து அசத்தி உள்ளார் .

இவர்கள் இரண்டு வீரர்களும் இணைந்து பல போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற வைத்துள்ளனர். இருவரும் இரு பெறும் சவால்களாக டெஸ்ட் போட்டிகளில் எதிர் அணிகளுக்கு உள்ளனர் .