சமீபத்தில் ஊக்கமருந்து சர்ச்சையினால் 21 நாட்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் இடம்பெற்றிருந்த அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலிருந்தும் தற்போது அவரை நீக்கியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பாக ராயல் லண்டன் உள்ளுர் ஒருநாள் தொடரில் சொந்த பிரச்சினை காரணமாக நான்டிகம்ஹைர் அணியிலிருந்து விலகினார். இருப்பினும் மே 30 அன்று தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணியில் இனைவேன் என தெரிவித்திருந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் இல்லாதது இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து உலகக் கோப்பை அணிக்கு பெரும் பின்னடைவாகும்.
இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஸ்லே கில்ஸி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எட் ஸ்மித் கலந்து ஆலோசித்து பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. வீரர்களின் நல்லொழுக்கத்திற்கு எந்த இடையுறும் இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் எதிர்வரும் அயர்லாந்திற்கு எதிரான ஒரெயொரு ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இவர் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாகிஸ்தானிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும், 15 பேர் கொண்ட இங்கிலாந்து முதன்மை உலகக்கோப்பை அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டதை பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஸ்லே கில்ஸி கூறியதாவது:
நாங்கள் ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளோம். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் எவ்வித கலங்கமும் இன்றி தங்களது சிறப்பான ஆட்டத்தை இயல்பாக வெளிபடுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். வீரர்களின் கவனம் முழுவதும் விளையாட்டின் மீது மட்டுமே இருத்தல் வேண்டும் என்பது இங்கிலாந்து கிரிக்கெட் வாரித்தின் விருப்பமாகும்.
மேலும் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கலை பற்றி அவர் கூறியதாவது,
அலெக்ஸ் ஹேல்ஸ் தற்போது நீக்கப்பட்டுள்ளதினால் அவரது வருங்கால கிரிக்கெட்டிற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு எப்போதும் துனண நிற்கும். எதிர்வரும் கவுண்டி சேம்பியன் ஷீப்பில் நான்டிகம்ஹைர் அணிக்காக விளையாடுவதை இங்கிலாந்து தேர்வுக்குழு கவனித்து கொண்டு தான் இருக்கும். இதில் எவ்வித மாற்றமும் இருக்காது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும், தொழில்முறை கிரிக்கெட் சங்கமும் அலெக்ஸ் ஹேல்ஸின் ஆட்டத்திறனில் மிகுந்த அக்கறையை காட்டும். கவுன்டியில் அவரது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தி மீண்டும் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணியில் கூடிய விரைவில் இடம்பிடிப்பார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து சர்வதேச அணிக்காக 70 ஒருநாள் போட்டிகள், 60 டி20 போட்டிகள், 11 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் எந்த வகையான ஆடுகளமாக இருந்தாலும் சிறப்பாக விளையாடும் திறமை உடையவராக அலெக்ஸ் ஹேல்ஸ் திகழ்கிறார். இங்கிலாந்து அணியிலிருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டதனால் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜெஸன் ராய் இங்கிலாந்து அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பான பார்ட்னர் ஷிப் செய்து விளையாடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.