இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனை சஸ்பென்ட் செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

Eoin Morgan
Eoin Morgan

பாகிஸ்தானிற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியிலிருந்து இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். மே 14 அன்று நடந்த போட்டியில் ஸ்லோ ஓவர் ரேட்டுடன் பந்தை வீசியதால் இயான் மோர்கன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரிஸ்டோலில் நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரண்டு ஓவர்களை வீச அதிக நேரம் இங்கிலாந்து அணி எடுத்துக் கொண்டது. இதனால் அணியின் கேப்டனுக்கு 40 சதவீத அபராதத்தையும் ஒரு போட்டியில் விளையாட தடையும், மற்ற வீரர்களுக்கு 20 சதவீத அபராதத்தையும் ஐசிசி விதித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இயான் மோர்கன் ஸ்லோ ஓவர் ரேட் சர்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இயான் மோர்கன் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு 7 ஓவர்களை மட்டுமே கொடுத்தார். பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடிய மொத்தமாக 4 மணி நேரம் ஆனது. இந்த தொடரில் மோர்கனுக்கு கிடைக்கும் சஸ்பென்ட் மற்றும் குறை புள்ளிகள் உலகக் கோப்பை தொடரை பாதிக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில வாரங்களில் தொடங்க உள்ள 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் நோக்கில் முழு ஆட்டத்திறனைக் கொண்டு திகழ்கிறது. இதற்கு ஒரு முன்மாதிரி தொடராக பாகிஸ்தான் தொடர் இங்கிலாந்திற்கு அமைந்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக் கோப்பைக்கு முன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த ஸ்லோ ஓவர் ரேட்-டில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மே 14 அன்று நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டியாக இருந்தது. இதில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அணி 359 ரன்களை 31 பந்துகள் மீதமிருந்த நிலையிலே வெற்றி பெற்றது.

சற்று அதிகமான பாகிஸ்தானின் ரன் இலக்கை அடையும் நோக்கில் களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் பௌலர்களின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸ் என விளாசித் தள்ளினர். 17 ஓவரிலேயே 159 ரன்களை பாகிஸ்தான் குவித்தது. அப்போது ஃபஹீம் அஸ்ரப் வீசிய பந்தில் ராய்(76) தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட் மிடில் ஓவரில் ஆட்டத்தை எடுத்துச் செல்ல மொய்ன் அலி மற்றும் இயான் மோர்கன் ஆட்டத்தை முடித்து வைத்தனர்.

இதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியில் இமாம்-உல்-ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்களை விளாசினார். இதனால் பாகிஸ்தான் அணி 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. முதல் 5 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி ஃபக்கர் ஜமான் மற்றும் பாபர் அஜாம் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களில் தடுமாறி வந்த நிலையில் இமாம் உல் ஹக் மற்றும் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இனைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பாகிஸ்தானால் 358 ரன்கள் குவிக்க முடிந்தது.

Quick Links