இங்கிலாந்து Vs பாகிஸ்தான் 2019: முதலாவது ஒருநாள் போட்டி ஒரு முன்னோட்டம் 

England Cricket Team
England Cricket Team

12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றனர். ஓவல் மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்த உள்ளது, இங்கிலாந்து அணி.

நேருக்கு நேர்:

ஒட்டுமொத்தமாக இவ்விரு அணிகளும் 80 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில், இங்கிலாந்து அணி 49 வெற்றிகளை குவித்து முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற 41 ஒருநாள் போட்டிகளில் 26 வெற்றிகளை குவித்துள்ளது, இங்கிலாந்து அணி. ஒட்டுமொத்தத்தில் ஓவல் மைதானம் 4-1என்ற விகிதத்தில் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக உள்ளது.

இங்கிலாந்து அணி:

அணியின் முக்கிய வீரர்கள் இடம் பெறாவிட்டாலும் ஏற்கனவே நடைபெற்ற டி20 போட்டியில் தனது பலத்தை நிரூபித்தது, இங்கிலாந்து அணி. அதேபோல, இன்றும் ஒரு பலமான ஆடும் லெவலை களமிறக்கும் முனைப்பில் உள்ளது.

பேட்டிங்:

முக்கிய பேட்ஸ்மேன்கள் - இயான் மோர்கன், ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ

கடந்த டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இயான் மோர்கன் அரைசதம் கடந்தார். மேலும், ஜோ ரூட் 45 ரன்களை அடித்தார். இவர்களின் தாக்கம் இன்றைய போட்டியிலும் நீடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும், இன்றைய போட்டியில் திரும்ப உள்ள ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பாடுபடுவர் என எதிர்பார்க்கலாம்.

பவுலிங்:

முக்கிய பந்துவீச்சாளர்கள் - சோப்ரா ஆச்சர், டாம் கரண், லியாம் பிளங்கெட்.

கடந்த 20 போட்டியில் தனது பவுலிங்கில் இரு விக்கெட்களைச் சாய்த்து இங்கிலாந்து அணியின் சர்வதேச டி20 போட்டிகளுக்கு அறிமுகமானார், சோப்ரா ஆச்சர். அதேபோல், இன்று நடைபெற உள்ள ஒரு நாள் போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். மேலும், அணியில் உள்ள மற்ற பந்து வீச்சாளர்களான லியாம் பிளங்கெட் மற்றும் டாம் கரண் ஆகியோரும் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் செயல்பட்டது போல இன்றும் செயல்படுவார்கள்.

எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:

இயான் மோர்கன், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜான்சன் ராய், லியாம் பிளங்கெட், டாம் கரன், அடில் ரஷித் மற்றும் சோப்ரா ஆச்சர்.

பாகிஸ்தான் அணி:

Pakistan Cricket Team
Pakistan Cricket Team

இங்கிலாந்து மண்ணில், 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி சாம்பியன் பட்டத்தை வென்றது, பாகிஸ்தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில்தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளை தோற்றுள்ளது, பாகிஸ்தான். அவற்றிலிருந்து மீண்டிட இன்றைய ஒருநாள் போட்டியில் தங்களது முழுத் திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.

பேட்டிங்:

முக்கிய பேட்ஸ்மேன்கள் - ஹாரிஸ் சோஹைல், பாபர் அஸம் மற்றும் பகர் ஜமான்

கடந்த டி20 போட்டியில் ஹாரிஸ் சோஹைல் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் அரைசதம் கடந்தனர். மற்றொரு பேட்ஸ்மேனான பகர் ஜமான் இதற்கு முன்னதாக நடைபெற்ற இரு பயிற்சி ஆட்டங்களில் முறையே 76 மற்றும் 101 ரன்களை குவித்து பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றார்.

பவுலிங்:

முக்கிய பந்துவீச்சாளர்கள் - இமாத் வாசிம், ஹசன் அலி மற்றும் ஜூனைத் கான்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தானின் இமான் வாசிம் மற்றும் ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அணியில் இடம்பெற்ற மற்ற பந்து வீச்சாளர்களான ஜூனைத் கான் மற்றும் ஷாஹின் அப்ரிடி ஆகியோர் கடந்த டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இன்றைய போட்டியிலும் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்பட்ட ஆடும் லெவன்:

சர்பராஸ் அகமது, முகமது அமீர், முகமது ஹஸ்னைன், பக்கர் ஜமான், பாபர் அஸம், இமாம் உல் ஹக், இமாத் வாசிம், ஹாரிஸ் சோகைல், ஆசிப் அலி, பாஹிம் அஷ்ரப் மற்றும் ஹசன் அலி

Edited by Fambeat Tamil