நடந்தது என்ன?
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்ய களமிறங்கவில்லை. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 387 என்ற அதிகப்படியான இலக்கை வங்கதேசத்திற்கு நிர்ணயித்தது. இங்கிலாந்து இன்னிங்ஸின் போது ஜாஸ் பட்லர் வங்கதேச பௌலர் மொஷாதிக் ஹொசைன் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசிய முயன்றபோது இடுப்பில் காயம் ஏற்பட்டதால் கேப்டன் இயான் மோர்கன் முன்னெச்சரிக்கையாக அவரை ஃபீல்டிங் செய்ய களமிறக்கவில்லை.
உங்களுக்கு தெரியுமா...
எதிர்பாரத விதமாக இங்கிலாந்து அணி தனது இரண்டாவது உலகப் போட்டியில் பாகிஸ்தானிற்கு எதிராக தோல்வியை தழுவியது. ஆனால் தற்போது வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 387 ரன்களை வங்கதேச அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜாஸ் பட்லர் ஆகியோரது சிறப்பான பங்களிப்பால் இங்கிலாந்து அணி இந்த இலக்கை வங்கதேசத்திற்கு எதிராக நிர்ணயிக்க முடிந்தது. கடினமான இலக்கை துரத்திய வங்கதேசம் இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 280 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் ஷகிப் அல் ஹாசன் சதம் விளாசினார்.
வங்கதேச இன்னிங்ஸின் போது ஜாஸ் பட்லர் விக்கெட் கீப்பங்கில் இல்லாமல் இருந்த காரணத்தால் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் பேட்ஸ்மேன் காயமடைந்து விட்டார் என பல்வேறு விவாதங்கள் வலம் வந்தன.
கதைக்கரு
ஜாஸ் பட்லர் 38வது ஓவரில் மொஷாதிக் ஹொசைன் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசிய முயன்றபோது போது காயம் ஏற்பட்டது. உடனே தனது இயல்பு நிலைக்கு பட்லர் இல்லாத காரணத்தால் மருத்துவர் அழைக்கப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்ட பின் மீண்டும் தனது இன்னிங்ஸை தொடர்ந்தார். இருப்பினும் பட்லருக்கு வலி தொடர்ந்ததால் இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்ய களமிறங்கவில்லை.
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், ஜாஸ் பட்லருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஃபீல்டிங் செய்ய அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார். தற்போது பட்லர் நலமுடன் உள்ளார் என தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும் ஜாஸ் பட்லரின் காயம் அடுத்த 48 மணி நேரங்களுக்கு கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அடுத்தது என்ன?
ஜாஸ் பட்லர் இதுவரை இங்கிலாந்து விளையாடிய 3 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில்18 ரன்களும், பாகிஸ்தானிற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 103 ரன்களும், வங்கதேசத்திற்கு எதிரான நான்காவது போட்டியில் 64 ரன்களையும் குவித்து மொத்தமாக 185 ரன்களை விளாசி சிறந்த ஆட்டத்திறனுடன் இங்கிலாந்து மிடில் ஆர்டரில் திகழ்கிறார்.
இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளை ஜீன் 14 அன்று சவுத்தாம்டனில் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாகும். இப்போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்புக்கு ஜாஸ் பட்லரின் பங்களிப்பு அவசியம் தேவை.