நீங்கள் உண்மையிலேயே கிரிக்கெட் ரசிகரா அப்படியானால் இதில் எந்தெந்தப் படங்கள் எல்.பி.டபள்யூ முறையில் விக்கெட்டுகள் தரப்படும் கூறுங்கள் பார்க்கலாம்.விடை கடைசி பக்கம், அதற்கு முன் அது எப்படி தரப்படுகிறது என்பதை ஒரு தொகுப்பாகக் காண்போம்.
LBW வினோதங்கள்:
இவ்வுலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் சென்று நீங்கள் கிரிக்கெட்டில் ரசிக்கும் தருணம் எதுவென்று கேட்டால் அவர்கள் பெரும்பாலும் பதில் அளிப்பது சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசும் தருணமாக தான் இருக்கிறது.ஆம், இந்த நவீன யுக கிரிக்கெட்டில் பவுலர்களை காட்டிலும் பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.அப்படி ஒரு சூழ்நிலையில் பவுலர்கள் பேட்ஸ்மேன்களை ஆட்டமிலக்க குறைந்த அஸ்திரங்களே உள்ளன,அதிலும் பாதி பவுலர்கள் பீல்டர்களையே நம்பியுள்ளனர்.அதனால் பவுலர்கள் ஸ்டாம்ப்ஸை குறிப்பார்த்து வீசுவார்கள், அப்படி வீசுகயில் போல்ட் அல்லது எல்.பி.டபள்யூ முறையில் வெளியேற்றுவார்கள்.சரி, நாம் கதைக்கு வருவோம், இதில் எல்.பி.டபள்யூ விக்கெட்டுகள் எப்படி தரப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் அதைப் பற்றி ஒரு கட்டுரையை காண்போம்.
எல்.பி.டபள்யூ அமல்:
கிரிக்கெட் விதி 36ன் கீழ் எல்.பி.டபள்யூ விக்கெட்டுகள் தரப்படுகிறது. ஏன் இந்த முறை என்றால்,மேலே குறிப்பிட்டது போல் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் போதுபவுலர்கள் ஸ்டாம்ப்ஸை குறிப்பார்த்து வீசுவது வழக்கம். அதையும் அவர்கள் பல கவசங்களை அணிந்து கொண்டு கால்களால் தடுத்துக் கொண்டே இருந்தால் பவுலர்கள் நிலை என்னவாகும். மூச்சிரைக்க பந்து வீசியும் என்ன பயன். அவ்வாறு நிகழ்வதை தடுக்கவே இம்முறையில் விக்கெட்டுகள் தரப்படுகிறது. சரி, இதில் என்ன மேட்டர் என்றால் அதை கையாளும் முறையில் தான் உள்ளது. களத்தில் காயும் அம்பயர்களுக்கு இது தான் பெரிய தலைவலியாக உள்ளது.
எல்.பி.டபள்யூ விக்கெட் முறைகள்:
எல்.பி.டபள்யூ முறையில் விக்கெட்டுகள் தருவது மிகவும் சிக்கலானது. இதில் பல விதிமுறைகள் உள்ளன, அவை
· பந்து குத்தும் இடம் (Pitch map)
· பந்து பேட்ஸ்மேன் காலில் படும் இடம்(ball impact)
· பந்து ஸ்டம்ப்ஸை படும் இடம் (wickets hitting).
இவை மூன்றும் ஒரு சேர இருந்தால் மட்டுமே எல்.பி.டபள்யூ தரப்படும்.
பந்து குத்தும் இடம் (Pitch map):
ஒரு பவுலர் வலதுகை பேட்ஸ்மேனுக்கு பந்துவீசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வீசும் பந்து சரியாக ஸ்டாம்ப் கோட்டிற்கு நேராக இருக்க வேண்டும் அல்லது ஆப்ஸ்டாம்ப் திசையில் இருக்கும் வேண்டும். மாறாக அது லெக்ஸ்டாம்ப் திசையில் கோட்டிற்கு வெளியே குத்தினால், அது ஏற்றுக் கொள்ள மாட்டாது. அப்படி விதிமுறைக்கு உட்பட்டால் அது சிவப்பு நிறத்தில் குறிக்கப்படும், இல்லை எனில் பச்சை நிறத்தில் குறிக்கப்படும். பச்சை நிறத்தில் குறித்தால் அப்போதே பவுலர் அப்பீல் நிராகரிக்கப்படும்.அடுத்த விதிக்கு செல்லாது.
பந்து பேட்ஸ்மேன் காலில் படும் இடம்(ball impact)
இருப்பதிலேயே சிக்கலான பகுதி இது தான்.ஆம், இது பேட்ஸ்மேன் காலில் தடுக்கும் பகுதி. பேட்ஸ்மேன் ஸ்டம்ப் கோட்டிற்கு நேராக வரும் பந்தை கால்களால் தடுத்தால் அது சிவப்பு நிறத்தில் குறிக்கப்படும். மாறாக கோட்டிற்கு வெளியே தடுக்கும் பட்சத்தில் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டு, பேட்ஸ்மேன் காப்பாற்றபடுவார்.
ஆக, அவ்வளவு தானா என்றால் இல்லை என்பதுதான் பதில். அடுத்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது ஸ்டம்பின் உயரம் , அது எப்படி அது மூன்றாவது விதியல்லவா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு பேட்ஸ்மேன் உயரமாகவோ குள்ளமாகவோ இருக்கும் பட்சத்தில் பந்து ஸ்டம்பை தாக்குவது மாறுபடும். நமது கிரிக்கெட் கடவுள் சச்சினையும் , கெயிலையும் ஒப்பிட்டு பாருங்கள். அதனால் அவர்கள் எவ்வளவு தூரம் நின்று காலில் வாங்குகிறார்கள் என்று கணிக்கப்படும். அதன் அளவு ஸ்டம்ப் கிரீஸிலருந்து 3 மீட்டர் ஆகும். 3m உள்ளே சிவப்பு நிறம் ,3m மேலே பச்சை நிறம் என்று குறிக்கப்படும்.
பந்து ஸ்டாம்ப்ஸை படும் இடம் (wickets hitting):
இது தான் கடைசி விதி, இதில் பந்து ஸ்டம்பை தாக்கினால் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டு அவுட் தரப்படும்.இல்லை எனில் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டு அவுட் இல்லை என்று அறிவிக்கப்படும்.
ஆக, இம்மூன்றும் சிவப்பு நிறத்தில் குறிக்கப்படும் பட்சத்தில்
எல்பிடபள்யூ விக்கெட் தரப்படும்.
சரி,விஷயத்துக்கு வருவோம், பதில்என்ன? இதோ விடை
அவுட்:
அதெப்படி இம்பேக்ட் வெளியே இருந்தால் நாட் அவுட் தானே?.
ஆம், ஒரு பேட்ஸ்மேன் பந்தை அடிக்க முற்படும்போது இம்பேக்ட் வெளியே இருந்தால் நாட்அவுட். இதில் பேட்ஸ்மேன் காலை மட்டுமே பயன்படுத்துகிறார் பேட் பயன்படுத்தவில்லை.அதனால் இது அவுட்.
நாட் அவுட்:
படம் 2: இம்பேக்ட் வெளியே ஆனால் பந்தை அடிக்க முற்படுகிறார், அதனால் இது நாட்அவுட்.
சரி நண்பர்களே, நான் விளக்கிய இந்த தொகுப்பு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் இதுபோல் ,இன்னும் ஒரு கட்டுரையில் காணலாம். நன்றி _/\_.