தற்போது நடந்து முடிந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திற்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் அதிகம் பேசப்பட்டவர் அஜாஸ் படேல். இரண்டாவது இன்னிங்ஸில் இவரின் 5 விக்கெட்டுகளே நியூசிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற வைத்தது.இவர் அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
30 வயதான அஜாஸ்படேல் இந்தியாவில் உள்ள பாம்பே(தற்போது மும்பை) நகரில் பிறந்தார். இவர் சிறு வயதிலேயே நியூசிலாந்தில் குடியேறியதாக கூறப்படுகிறது. சிறுவயது முதலே இவருக்கு கிரிக்கெட்ல் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. ஆனால் விளையாட சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த வருடம் நடைபெற்ற நியூசிலாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ப்ளங்கட் சீல்டு தொடரில் சென்ட்ரல் அணிக்காக விளையாடிய இவர் அந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுளர் ஆவார். அந்த தொடரில் 9 போட்டிகள் விளையாடிய படேல் 48 விக்கெட்டுகளும் ஆவ்ரேஜ் 21.52 வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில் 'அஜாஸ் படேல் சிறப்பாக பந்து வீசுகிறார் உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டார் .எனவே அவரை அணி நிர்வாகம் காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய மிட்சில் சாட்னருக்கு பதிலாக தேர்வுசெய்வதாக கூறியது'.மிட்சில் சாட்னர் ஏற்கனவே காயம் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. அஜாஸ் படேல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் சேர்க்கப்பட்டார்.2 டி20 போட்டிகளில் விளையாடிய இவரால் விக்கெட் எதையும் வீழ்த்த முடியவில்லை. பின்னர் இவருக்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.முதலாவது இன்னிங்ஸ்ல் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்திய இவர் இரண்டாவது இன்னிங்ஸ்ல் 5 விக்கெட்டுகளை வீழ்த்ததி நியூசிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்தார்.இவரின் சுழலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை பரிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.அந்த போட்டியில் இவரே ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
இவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடும் 5வது இந்தியர் ஆவர்.ஏற்கனவே டெட் பெட்காக் ,டாம் புனா,இஷ் சோதி மற்றும் ஜுட் ராவல் ஆகியோர் நியூசிலாந்து அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதில் இஷ் சோதி மற்றும் ராவல் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடினர். ராவல் 48 ரன்களும் ,சோதி 3 விக்கெட்டும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதில் மற்ற இரண்டு வீர்களும்(டெட் பெட்காக் மற்றும் டாம் புனா) நியூசிலாந்து ஏ அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணி இந்தியா ஏ அணியுடன் ஆடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று ஹாங்காங் நாட்டைச்சேர்ந்த மார்க் சாப்மேன் நியூசிலாந்து அணியில் விளையாடி வருகிறார்.இவர் அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியிலேயே ஹாங்காங் அணிக்காக சதமடித்து அசத்தினார்.தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே சதமடித்த 10 வீரர்களிள் இவரும் ஒருவர்.இவ்வாறு பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.