இந்திய அணி தனது நியூஸிலாந்து சுற்று பயணத்தை சரிவுடன் முடித்து இருந்தாலும் வெளிநாட்டு தொடர்களில் இதுவரை பார்த்திராத அளவுக்கு தங்களது திறமையை காட்டி உள்ளனர் என்றே சொல்லவேண்டும். ஆம் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்து இருந்தாலும் ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்தை மிரள வைத்தது.
அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா சென்ற நமது இந்திய அணி சில வரலாறு காணாத வெற்றிகைளை பெற்றுவந்தது. 20 ஓவர் போட்டியை சமனில் முடித்து இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி பந்தாடியது என்றே சொல்லலாம். இதில் வரலாறு காணாத டெஸ்ட் தொடர் வெற்றியும் அடங்கும். கடந்த இரண்டு வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை மரண மாசாக வெளிக்காட்டியது. உலக கோப்பைக்கு முன்னர் இந்த இரண்டு வெளிநாட்டு ஒரு நாள் தொடர் வெற்றிகள் இந்திய அணியின் நம்பிக்கையை உயர்த்தும். மற்றும் இந்த வெற்றிகள் மற்ற அணிகளுக்கு இந்திய அணி மீதான அச்சத்தை இன்னும் சற்று அதிகமாக செய்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த வெற்றிகளால் இந்திய அணி ரசிகர்கள் சற்று நிம்மதியாகவே உலக கோப்பைக்கு காத்து கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து எதிரான வெளிநாட்டு தொடர்களை முடித்தி விட்டு ஆஸ்திரேலியா உடனான உள்ளூர் தொடருக்கு ஆயத்தம் ஆகி வருகிறது இந்திய அணி.
20 ஓவர் போட்டியில் எதிர்பார்க்கும் இரண்டு மாற்றங்கள் :
இந்திய அணியின் பேட்டிங் பற்றி கவலையே இல்லை. விராட் கோலி இந்த இரு போட்டிகளிலும் பங்கேற்காத நிலையில் ரோஹித் ஷர்மாவே இந்திய அணியை வழி நடத்துவார். ஆதலால் இந்திய அணியில் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஆன லோகேஷ் ராகுலிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகு தனது திறமையை சற்று வெளிப்படுத்த தொடங்கி உள்ளார் என்றே சொல்லவேண்டும். ஆதலால் ஸுப்மண் கில் வெளியேற்ற படலாம்.
பந்து வீச்சில் சென்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல் பட்ட உமேஷ் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கலாம். முஹம்மத் சிராஜ் வெளியேற்ற பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்க படலாம்.
ஒரு நாள் தொடருக்கான இரண்டு மாற்றங்கள் :
உலக கோப்பை முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இந்திய அணி மேல் இருக்கிறது. உலக கோப்பைக்கு சரியான அணியை தேர்வு செய்ய இதுவே நமக்கு கடைசி வாய்ப்பு. ராயுடு, கேதார் மற்றும் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் இன்னும் வலு சேர்க்க வேண்டும். அது மட்டும் இன்றி உலக கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கும் நான்காவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பதிலை இந்த தொடரில் தேட வேண்டும்.
சிறிது நீண்ட ஓய்வுக்கு பின்னர் நமது நட்சத்திர வீரர்கள் ஆன கேப்டன் விராட் கோலி மற்றும் நமது நம்பகமான பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோர் இந்த தொடருக்கு அழைக்கப்படுவர். உலக கோப்பை போட்டிக்கு ஏற்றவாறே பதினோரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சோதிக்கபடுவர். லோகேஷ் ராகுல் மாற்று தொடக்க வீரராக சேர்க்கபடலாம். இவர்களுக்கு பதிலாக முஹம்மத் சிராஜ் மற்றும் கில் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். உலக கோப்பைக்கு முன்னதாக நடக்கும் கடைசி ஒரு நாள் தொடர் என்பதால் இந்திய ரசிகர்கள் இந்த தொடருக்கு சற்று ஆர்வமாகவே காத்து இருக்கின்றனர்.