ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளில், இதுவரை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லாதவை மூன்று அணிகள். அவற்றில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. கடந்த 2008 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இருப்பினும், சாம்பியன் பட்டத்தை வெல்ல தவறியது. நடப்பு தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. 2019 ஐபிஎல் தொடரில் இந்த அணிக்கு அதிக தொகை ஒப்பந்தமாகி சிறப்பாக செயல்படாத வீரர்களை அடுத்த சீசனில் இந்த அணி விடுவிக்கும். அவ்வாறு, அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி சிறப்பாக செயல்படாததால், அடுத்த சீசனில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்களை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.ஆண்டிரூவ் டை:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார், டை. இதனால் நடப்பு தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் இவரை தக்க வைத்தது. கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் நடப்பு தொடரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி ஏமாற்றம் அளித்தார். இவருக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகை 7.2 கோடி ரூபாய் ஆகும். எனவே, இவரை அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஏலத்தில் விடுவிக்க பெரும்பாலான வாய்ப்புகள் உள்ளது.
#2.கருண் நாயர்:
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. அதன்பின்னர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த அணிக்கு அதிக ரன்களை குவித்த பட்டியலில் மூன்றாமிடம் வகித்தார். இதனால் பஞ்சாப் அணி நிர்வாகம் இவரை இந்த ஆண்டும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பி 5.6 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரே ஒரு லீக் ஆட்டத்தில் மட்டும் இவர் களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் வெறும் 5 ரன்களை குவித்து ஏமாற்றம் அளித்தார். இவருக்கு பதிலாக, அணியில் மயங்க் அகர்வால் போன்ற முன்னணி பேட்ஸ்மேன் இருந்ததால் இவருக்கு அணியில் மறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
#3.அங்கித் ராஜ்புட்:
இவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தமானார். இதன்பேரில், கடந்த ஆண்டு களமிறக்கப்பட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சமி போன்ற சிறப்பான இந்திய பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்ததால், இவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொழில் இந்த பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது