சுரேஷ் ரெய்னா எனும் மனிதன்!

Enter caption

2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது முதல் போட்டியில் களம் கண்டார் ரெய்னா.ஸ்ரீ லங்கா உடனான முதல் போட்டியில் ரன் ஏதுமின்றி வெளியேறினாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தான் யார் என நிரூபித்தார்.பின்னாட்களில் டெஸ்டில் சோபிக்க தவிறினாலும் குறைந்த ஓவர் போட்டிகளில் அரசனாகவே திகழ்ந்தார் ரெய்னா.

அவர் இந்தியாவுக்காக 768 டெஸ்ட் ரன்களும் 5615 ஒரு நாள் போட்டி ரன்களும் 1605 20 ஓவர் போட்டி ரன்களும் விளாசி உள்ளார். மிடில் ஆர்டர் வரிசையில் இறங்கும் ரெய்னா இந்தியாவிற்காக பல முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளார்.2011 உலக கோபையின் போது கால் இறுதியில் ஒரு நெருக்கடியான இலக்கை துரத்தி கொண்டிருகையில் தனது 34(28) * பங்களிப்பின் மூலம் வெற்றியை உறுதி செய்தார்.பின்னர் அறை இறுதியில் பாகிஸ்தான் எதிராக இறுதி கட்டத்தில் தனது 36 ரன்கள் மூலம் அணியின் இலக்கை 260 ஆக உயர்த்தினார்.அந்த போட்டியை இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறி 28 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையையும் கைப்பற்றியது.இது போன்று தனது சிறு பங்களிப்பின் மூலம் இந்தியாவை பெருமை பட வைத்திருக்கிறார் ரெய்னா.

சென்னை அணியின் சிங்கமாகவே கர்ஜித்தார் ரெய்னா.ஐபில்-லில் அதிக ரன்கள் அடித்தவரும் இவர்தான் சென்னை அணிக்காக அதிக ரன்கள் அடித்தவரும் இவர்தான்.தனது பங்களிப்பின் மூலம் சென்னையின் தத்து பில்ளையாகவே போற்றப்பட்டார் ரெய்னா.தமிழ்நாட்டில் தல தோனிக்கு பிறகு அதிக செல்வாக்கு உள்ள வீரர்களில் ரெய்னா முக்கியமானவர். இந்திய அணியில் தற்போது இல்லை என்றாலும் சென்னை ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடம் ரெய்னாவுக்கு உண்டு.தோனியின் தளபதியாக இருந்து பல போட்டிகளில் தனியாகவே வெற்றியை தேடி தந்திருக்கிறார்.மற்ற அணிகளுக்கு ரெய்னா தோனி என்றாலே பயம் வரும் அளவிற்கு இவர்களின் கூட்டணி இருந்தது.

சென்னை ரசிகர்கள் இவரை அன்பாக சின்ன தல என்று அழைப்பது வழக்கம்

#1 ரெய்னாவின் பண்புகள் :

Enter caption

நீங்களே பார்த்து இருப்பீர்கள் பந்து வீச்சாளர் விக்கெட்டை வீழ்த்தியவுடன் முதலில் அவரை சென்று பாராட்டும் நபர் ரெய்னாவாக தான் இருக்கும்.அவர் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்தாலும் சரி தொலைவில் இருந்தாலும் சரி விக்கெட் கீப்பர் வருவதற்கு முன் பந்து வீச்சாளர் கட்டி தழுவி பாராட்டு பொழியும் தன்மை ரெய்னாவிடம் சிறந்தது.புயல் வேகத்தில் ஓடும் இம்ரான் டாஹிரையும் பிடித்து பாராட்டுவர் ரெய்னா.விக்கெட் வீழ்த்தும் போது மட்டுமின்றி அவர்கள் நன்றாக செயல் படாத நேரத்திலும் அவர்களை ஊக்குவித்து அவர்களை நன்றாக செயல் பட வைப்பவர் ரெய்னா.பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி பீல்டிங்கிலும் வீரர்களை ஊக்குவித்து அணியின் கோச் ஆகவே செயல்படுவார். பிறர் வெற்றிக்கு முதலில் சென்று பாராட்டும் குணம் இவரிடம் சற்று அதிகம் என்றே சொல்லலாம்.

“ 2015 உலக கோப்பையின் போது விராட் தனது சதத்தை கொண்டாடுவதற்கு முன்னர் கொண்டாடியவர் ரெய்னா

#2 மற்ற வீரர்களை மதிப்பது :

Enter caption

அனைவருக்கும் தெரியும் ரெய்னாவும் தோனியும் பிரிக்க முடியாத நண்பர்கள் என்று.தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் போது ரெய்னா தோனிவுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார்.அதில் இருவரின் கண்களும் கண்ணிருடனே காணபட்டது. அடுத்த போட்டியில் தோனியின் டெஸ்ட் சட்டையை கொண்டு களம் இறங்கி தனது நட்பை நிரூபித்தார் ரெய்னா.தனது அணி வீரர்கள் மட்டுமின்றி தன் எதிரணி வீர்ரகளையும் பாராட்டி மதிப்பவர் ரெய்னா. 2017 ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக ஆடிய போது டெல்லிக்கு எதிரான போட்டியில் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்.முதலில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி.பின்னர் வந்த ரிஷப் பண்ட் தனது அதிரடியான ஆட்டத்தால் போட்டியின் போக்கை மாற்றினர் இறுதியில் 97(43) என்று ஆட்டம் இழந்து தனது சதத்தை பூர்த்தி செய்ய தவறினார்.குஜராத் அணி வீரர்கள் ரிஷபின் விக்கெட்டை கொண்டாடி கொண்டிருந்த போது அவரிடம் சென்று அவரது கன்னத்தில் கை வைத்து ஆறுதல் உரைத்து அனைவரது மனதையும் கவர்ந்தார் ரெய்னா.

#3 அணியின் நம்பகமான வீரர் :

Enter caption

பேட்டிங்கில் தனக்கென்று ஒரு இடம் இல்லாமல் இந்திய அணியின் தேவைக்கேற்ப களம் இறங்கி ரன் குவித்தவர் ரெய்னா.சூழ்நிலைகளை பொறுத்து முன்பாதி பின்பாதி என இறங்கினாலும் சற்றும் முகம் சுளிக்காமல் அணியின் தேவையை புரிந்து கொள்வார்.இதனால் இவர் கிரிக்கெட் வாழ்கை சற்று சரிவே கண்டது பின்பாதியல் இறங்கும் பொழுது கம்மியான பந்துகளே மீதம் இருக்கும் அதிலும் எவ்வளுவு முடியுமோ அவ்வளவு ரன்களையம் சேகரிப்பார் துளி பொறாமை இன்றி.இவருக்கு தனது வெற்றிகளை விட தனது அணியின் வெற்றியை முக்கியம். தனது அணிக்காக தனது சுய சாதனைகளை கூட கருத்தில் கொள்ளாமல் அதிரடியாக ஆடுபவர். தான் அணியில் இல்லா விட்டாலும் இந்தியாவிற்காக தனது ஆதரவை டிவிட்டரில் பதிவு செய்பவர் ரெய்னா.

#4 அற்பணிப்பு :

Enter caption

இந்தியாவின் சிறந்த 5 பீல்டர்களில் சுரேஷ் ரெய்னாவிர்க்கும் இடம் உண்டு.எந்த இடத்தில் வேண்டுமானாலும் பீல்டிங் செய்யும் ஆற்றல் இவரிடம் உண்டு.வாய்ப்புகளை விக்கெடாக மாற்றும் திறமைசாலி.பேட்டிங் பவுலிங் பீல்டிங் என்று தன்னால் அணிக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் 100% செய்பவர் ரெய்னா.இதுவரை ஐபில்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 148 போட்டிகளில் விளையாடி உள்ளது அதில் 147 போட்டிகளில் களம் கண்டவர் ரெய்னா.தனது திருமண நாளின் போது காலையில் அணியுடன் பயிற்சியில் ஈடு பட்டுவிட்டு மாலையில் தனது திருமணத்திற்கு தனது அணி வீரர்களுடன் சென்றவர் ரெய்னா.இந்த நிகழ்வுகளே போதுமானது ரெய்னாவின் அற்பணிபை பற்றி. ஐபில் போட்டிகளின் அரக்கன் என்றே சொல்லலாம்.தனது நேர்த்தியான அதிரடி ஆட்டத்தின் மூலம் முதல் தொடரிலேயே சென்னை ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தார் ரெய்னா

தனது கிரிக்கெட் மூலம் மட்டுமின்றி தனது ஆளுமை அற்பணிப்பு நடத்தை மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவர் ரெய்னா.துளி அளவும் பொறாமை இல்லை கிரிக்கெட்டின் மீது கொள்ளை அன்பு ரசிகர்களை தனது பலமாக நினைக்கும் இவரது பாங்கு.இவர் விளையாடும் போதே அந்த வாக்கியம் உண்மை என்று தோன்றுகிறது (Cricket is a gentleman’s game) இவரை போல் சோதனைகளை சந்திதவர்களும் இல்லை இவரை போல் அதிலிருந்து மீண்டு வந்தவர்களும் இல்லை.விடாமுயற்சி மட்டுமே வெற்றிக்கு வழி என நிரூபித்தார்.

என்றும் எங்கள் மனதில் சின்ன தலையாக விளங்கும் எம் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications