#2 மற்ற வீரர்களை மதிப்பது :
அனைவருக்கும் தெரியும் ரெய்னாவும் தோனியும் பிரிக்க முடியாத நண்பர்கள் என்று.தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் போது ரெய்னா தோனிவுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார்.அதில் இருவரின் கண்களும் கண்ணிருடனே காணபட்டது. அடுத்த போட்டியில் தோனியின் டெஸ்ட் சட்டையை கொண்டு களம் இறங்கி தனது நட்பை நிரூபித்தார் ரெய்னா.தனது அணி வீரர்கள் மட்டுமின்றி தன் எதிரணி வீர்ரகளையும் பாராட்டி மதிப்பவர் ரெய்னா. 2017 ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக ஆடிய போது டெல்லிக்கு எதிரான போட்டியில் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்.முதலில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி.பின்னர் வந்த ரிஷப் பண்ட் தனது அதிரடியான ஆட்டத்தால் போட்டியின் போக்கை மாற்றினர் இறுதியில் 97(43) என்று ஆட்டம் இழந்து தனது சதத்தை பூர்த்தி செய்ய தவறினார்.குஜராத் அணி வீரர்கள் ரிஷபின் விக்கெட்டை கொண்டாடி கொண்டிருந்த போது அவரிடம் சென்று அவரது கன்னத்தில் கை வைத்து ஆறுதல் உரைத்து அனைவரது மனதையும் கவர்ந்தார் ரெய்னா.
#3 அணியின் நம்பகமான வீரர் :
பேட்டிங்கில் தனக்கென்று ஒரு இடம் இல்லாமல் இந்திய அணியின் தேவைக்கேற்ப களம் இறங்கி ரன் குவித்தவர் ரெய்னா.சூழ்நிலைகளை பொறுத்து முன்பாதி பின்பாதி என இறங்கினாலும் சற்றும் முகம் சுளிக்காமல் அணியின் தேவையை புரிந்து கொள்வார்.இதனால் இவர் கிரிக்கெட் வாழ்கை சற்று சரிவே கண்டது பின்பாதியல் இறங்கும் பொழுது கம்மியான பந்துகளே மீதம் இருக்கும் அதிலும் எவ்வளுவு முடியுமோ அவ்வளவு ரன்களையம் சேகரிப்பார் துளி பொறாமை இன்றி.இவருக்கு தனது வெற்றிகளை விட தனது அணியின் வெற்றியை முக்கியம். தனது அணிக்காக தனது சுய சாதனைகளை கூட கருத்தில் கொள்ளாமல் அதிரடியாக ஆடுபவர். தான் அணியில் இல்லா விட்டாலும் இந்தியாவிற்காக தனது ஆதரவை டிவிட்டரில் பதிவு செய்பவர் ரெய்னா.