#4 அற்பணிப்பு :
இந்தியாவின் சிறந்த 5 பீல்டர்களில் சுரேஷ் ரெய்னாவிர்க்கும் இடம் உண்டு.எந்த இடத்தில் வேண்டுமானாலும் பீல்டிங் செய்யும் ஆற்றல் இவரிடம் உண்டு.வாய்ப்புகளை விக்கெடாக மாற்றும் திறமைசாலி.பேட்டிங் பவுலிங் பீல்டிங் என்று தன்னால் அணிக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் 100% செய்பவர் ரெய்னா.இதுவரை ஐபில்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 148 போட்டிகளில் விளையாடி உள்ளது அதில் 147 போட்டிகளில் களம் கண்டவர் ரெய்னா.தனது திருமண நாளின் போது காலையில் அணியுடன் பயிற்சியில் ஈடு பட்டுவிட்டு மாலையில் தனது திருமணத்திற்கு தனது அணி வீரர்களுடன் சென்றவர் ரெய்னா.இந்த நிகழ்வுகளே போதுமானது ரெய்னாவின் அற்பணிபை பற்றி. ஐபில் போட்டிகளின் அரக்கன் என்றே சொல்லலாம்.தனது நேர்த்தியான அதிரடி ஆட்டத்தின் மூலம் முதல் தொடரிலேயே சென்னை ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தார் ரெய்னா
தனது கிரிக்கெட் மூலம் மட்டுமின்றி தனது ஆளுமை அற்பணிப்பு நடத்தை மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவர் ரெய்னா.துளி அளவும் பொறாமை இல்லை கிரிக்கெட்டின் மீது கொள்ளை அன்பு ரசிகர்களை தனது பலமாக நினைக்கும் இவரது பாங்கு.இவர் விளையாடும் போதே அந்த வாக்கியம் உண்மை என்று தோன்றுகிறது (Cricket is a gentleman’s game) இவரை போல் சோதனைகளை சந்திதவர்களும் இல்லை இவரை போல் அதிலிருந்து மீண்டு வந்தவர்களும் இல்லை.விடாமுயற்சி மட்டுமே வெற்றிக்கு வழி என நிரூபித்தார்.
என்றும் எங்கள் மனதில் சின்ன தலையாக விளங்கும் எம் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.