ட்விட்டரில் வலம் வரும் கிரிக்கெட் பிரபலங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Cricketers new year tweets
Cricketers new year tweets

2019 ஆம் ஆண்டு தற்போது துவங்கி உள்ள நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் அதற்கான வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அவற்றை பற்றிய தொகுப்பை இங்கு காண்போம்.

#1 விராத் கோலி

Check out @imVkohli’s Tweet:

இந்திய அணியின் கேப்படன் விராத் கோலி தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால் ஆஸ்திரேலியா-வில் உள்ளார். இந்நிலையில் நேற்று அவர் புத்தாண்டு கொண்டாட்டத்தை தனது மனைவி அனுஷ்கா ஷர்மா-வுடன் ஆஸ்திரேலியாவில் கொண்டாடினார். அதனை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

#2 விரேந்திர சேவாக்

Check out @virendersehwag’s Tweet:

இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக் எந்தவொரு நிகழ்வையும் ட்விட்டரில் பதிவு செய்யக்கூடியவர். இவர் தனது புத்தாண்டு வாழ்த்துகளை ரசிகர்களுக்கு தனது குடும்பத்துடன் தெரிவித்துள்ளார்.

#3 அஜின்கா ரகானே

Check out @ajinkyarahane88’s Tweet:

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜின்கா ரகானே தற்போது ஆஸ்திரேலியா-வில் உள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சிட்னி நகரில் வான வேடிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடுவதாக தெர்வித்துள்ளார்.

#4 குர்னல் பாண்டியா

Check out @krunalpandya24’s Tweet:

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான குர்னல் பாண்டியா தனது மனைவியுடன் புத்தாண்டை வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#5 சுரேஷ் ரெய்னா

Check out @ImRaina’s Tweet:

இந்திய அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா தனது ரசிகர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

#6 மிதாலி ராஜ்

Check out @M_Raj03’s Tweet:

இந்திய மகளிர் அணியின் ஜாம்பவான் மிதாலி ராஜ். இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் ரசிகர்களுக்கு “ அனைவரும் அன்பு மற்றும் பாசத்துடன் இருங்கள் ஏனென்றால் இவற்றை விலை கொடுத்து வாங்க முடியாது “ என புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

#7 முகமது கைப்

Check out @MohammadKaif’s Tweet:

இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் இந்திய அணிக்காக பல ஆட்டங்கள் விளையாடி உள்ளார். இவர் பேட்டிங் மட்டுமல்லாமல் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கொண்டாடுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

#8 ஹர்பஜன் சிங்

Check out @harbhajan_singh’s Tweet:

இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் ட்விட்டரில் அதிக கருத்துக்களை பதிவிடக்கூடியவர். இவர் ஐபிஎல்-ல் சென்னை அணிக்கு ஏலத்தில் எடுத்ததில் இருந்து தமிழில் அதிகமான கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்தார். இவர் புத்தாண்டை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வரவேற்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

#9 யுவராஜ் சிங்

Check out @YUVSTRONG12’s Tweet:

இந்திய அணியின் சிக்சர் மன்னன் மற்றும் டி20 போட்டிகளின் நாயகன் என அழைக்கப்பட்டவர் யுவராஜ் சிங். ஆனால் தற்போது அவருக்கு இந்திய அணியில் இடமில்லை காரணம் அவரது மோசமான பார்ம். அவர் இந்திய அணிக்காக பல உலகக்கோப்பை தொடரில் விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி அனைத்திலும் தொடர் நாயகன் விருதையும் வென்ற ஒரே வீரர் இவரே. இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. கடைசியில் மும்பை அணி இவரை அடிப்படை விலைக்கே வாங்கியது. இவ்வாறு இருக்கும் நிலையில் யுவராஜ் தனக்கு 2019 உலகக்கோப்பை இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைப்பது மிகவும் அரிது என உணர்ந்த அவர் அதனை சூசகமாக தனது புத்தாண்டு பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

#10 ஹர்ஷா போகுல்

Check out @bhogleharsha’s Tweet:

கிரிக்கெட்-ன் குரல் என்று அழைக்கப்படுபவர் ஹர்ஷா போகுல். இவர் கிரிக்கெட் சார்ந்த அனைத்து கருத்துக்களையும் உடனுக்குடன் ட்விட்டரில் பதிவு செய்யக்கூடியவர். இவர் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications