யவராஜ் சிங் 2019 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டு உள்ளார். எனவே எதிர்வரும் 12வது ஐபிஎல் சீசனில் யுவராஜ் சிங் புதிய அணியில் இணைய உள்ளார். ஏலத்திற்கு இன்னும் 3 வாரங்களே உள்ளது. கடந்த சீசனின் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சிறப்பான அதிரடி வீரரை 2019 ஐபிஎல் சீசனுக்கு தேடிவருகிறது.
பெரும்பாலான ரசிகர்கள் யுவராஜ் சிங்கை வரும் ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என சமுக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்கின்றனர். 2011 உலகக் கோப்பை போட்டிகளில் அதிரடி பேட்டிங் ஜோடி என்றால் அது யுவராஜ் சிங் மற்றும் தோனிதான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
யுவராஜ் சிங் கிங்ஸ் XI பஞ்சாப் அணியிலிருந்து ஒரேயொரு சீசனுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டு உள்ளார். 2007 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டநாயகன் மற்றும் 2011 உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங் 2018 ஐபிஎல் லில் 8 போட்டிகளில் பங்கேற்று 65 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அத்துடன் பங்கேற்ற 8 போட்டிகளிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்து 10.93 சராசரியையும் , ஸ்ட்ரைக் ரேட் 90 க்கு குறைவாகவும் இருந்ததால் பஞ்சாப் அணி நிர்வாகம் அவரை 2019 ஐபிஎல் சீசனில் அணியிலிருந்து கழட்டிவிட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்று வரும் ரஞ்சிக்கோப்பையிலும் பஞ்சாப் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார்.
யுவராஜ் சிங் சென்னை அணியில் இவ்வருட ஏலத்தில் எடுக்கப்பட்டால் தோனியின் தலைமையில் அணிக்கு ஒரு கூடுதல் பலமாக இருப்பார் என்பது சந்தேகமில்லா உண்மை ஆகும். ஆனால் தற்போது அவரை சென்னை அணியில் எடுத்தாலும் ஆடும் XI ல் விளையாடுவது சந்தேகம் தான். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னணி மிடில் ஆர்டர் வீரர்களான பிராவோ, ரெய்னா , கேடர் ஜாதவ் , தோனி போன்ற வீரர்கள் உள்ளதால் அவருக்கு ஆடும் XIல் வாய்ப்பு கிடைப்பது அரிதாகும். இருந்தாலும் யுவராஜ் சிங் சென்னை அணிக்கு ஒரு சிறந்த பேக்-அப் வீரராக இருப்பார்.
கடந்த சீசனில் தோனியின் தலைமையில் சென்னை அணியில் விளையாடிய ராயுடு , கேதார் ஜாதவ் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச அணியில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதேபோல் யுவராஜ் சிங் சென்னை அணியில் 2019 ஐபிஎல் சீசனில் விளையாடினால் சர்வதேச அணியில் மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளது. யுவராஜ் சிங் விஜய் ஹசாரே கோப்பையில் தனது ஆட்டத்தை ஓரளவிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
யுவராஜ் சிங் ஒரு சிறந்த அனுபவ வீரர். அவருடைய உலகக்கோப்பை அனுபவம் கண்டிப்பாக தற்போதைய இந்திய அணி ஆல்- ரவுண்டர்களுக்கு கண்டிப்பாக தேவை. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங் சென்னை அணியில் எடுக்கப்பட்டால் தோனியின் ஆதரவை பெற்று சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் மீண்டும் இணைவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
எழுத்து : விக்னேஷ்
மொழியாக்கம்:சதீஸ்குமார்