இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த 5 வீரர்கள் 

டடன்டா டைபு
டடன்டா டைபு

#3 கிரேக் கீஸ்வெட்டர் (இங்கிலாந்து)

கிரேக் கீஸ்வெட்டர்
கிரேக் கீஸ்வெட்டர்

இப்பட்டியலில் மற்றொரு இங்கிலாந்து வீரர். 27வது வயதில் ஓய்வை அறிவிக்கும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டார். இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்க வீரரான இவர், 2014ம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது வீசப்பட்ட ஒரு பந்து முகத்தில் பட்டதால், காயம் ஏற்பட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தென் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இவர், 2006ம் ஆண்டு நடைபெற்ற 19 வயத்திற்குற்பட்ட வீரர்களுக்கான உலகக்கோப்பையில் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடினார்.

காயத்திற்கு பிறகு இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்ற கிரேக் கீஸ்வெட்டர், கண்ணில் ஏற்பட்ட காயம் குணம் ஆகாததால் 2015ம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். 46 ஒருநாள் போட்டி மற்றும் 26 டி20 போட்டிகளில் பங்குபெற்றுள்ள கிரேக் கீஸ்வெட்டர், தற்போது தனது வாழ்க்கையை கோல்ப் வீரராக கழித்து வருகிறார்.

#2 ஜாபர் அன்சாரி

ஜாபர் அன்சாரி 
ஜாபர் அன்சாரி

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான இவர், 25 வயதில் கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றார். இடது கை சூழல் பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனான ஜாபர் அன்சாரி, சட்டபடிப்பை தொடர்வதற்காக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கிரிக்கெட்டில் இருக்கும் போதே படிப்பில் ஆர்வமாக இருந்த அன்சாரி, உலகப்புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர். பின்பு லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை தொடங்கியவர், முதுகலை பட்டமும் பெற்றார். தற்போது சட்ட வல்லுனராக தன் வாழ்க்கையை செலவழித்து வருகிறார். இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் பங்குபெற்றுள்ளார்.

#1 பியூ கேஸன்

பியூ கேஸன்
பியூ கேஸன்

சீனமன் பந்து வீசக்கூடிய நியூ சவுத் வேல்ஸ் வீரரான பியூ கேஸன், பார்படாஸ் மைதானத்தில் முதல் போட்டியில் பங்கேற்றார். டெஸ்ட் போட்டியுடன் தொடங்கிய இவரது வாழ்க்கை, அந்த ஒரு ஒரு போட்டியுடன் ஓய்வும் பெற்றார். 2010ம் ஆண்டு இவருக்கு இருதய கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நீண்ட ஓய்வுக்கு பிறகு மீண்டும் விளையாட முடிவெடுத்த பியூ கேஸன், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று 28 வயதில் ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து உள்ளூர் போட்டிக்கான அணிகளுக்கு பயிற்சி அளித்து வந்தார். 53 முதல் தர போட்டிகளில் பங்குபெற்றுள்ள பியூ கேஸன், 123 விக்கெட்களை செய்துள்ளார். பேட்டிங்கிலும் 1500 ரங்களுக்கு மேல் குவித்துள்ளார்.