இந்திய அணி வெளிநாட்டு தொடரில் டெஸ்ட் போட்டிகளில் வெல்வது கனவாகவே இருந்தது. அதை மாற்றியமைத்த பெருமை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியையே சாரும். 2007-08 காலகட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வென்று அசத்தியது.
தோனி தலைமையில் இந்திய அணி தரமான வேகப்பந்துவீச்சாளர்களை களம் கண்டாலும் வெளிநாட்டு மண்ணில் சோபிக்க முடியவில்லை. விராட் கோலி தலைமையில் இந்திய அணி வலுவான வீரர்களை கொண்டிருந்தாலும் நிரந்தரமற்ற அணியையே கொண்டுள்ளது. அணி நிர்வாகத்தின் தவறான முடிவுகள் அணியை பெரிதும் பாதித்தது. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பெரிதும் விமர்சிக்கப்படுகின்றனர். ரவி சாஸ்திரி முன்னாள் வீரர்களான சேவாக் ,கங்குலி மற்றும் கவாஸ்கர் ஆகியோரால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறார். இந்த கட்டுரையானது பிசிசிஐ ரவி சாஸ்திரிக்கு பதிலாக வேறு எந்த மாற்று பயிற்சியாளரை நியமிக்கலாம் என்பதை பற்றியது.
#5) டாம் மூடி
டாம் மூடி மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்.இவர் ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ், பிபிஎல்-ல் ராங்பூர் ரைடர்ஸ், பிஎஸ்எல்-ல் முல்டான் சுல்தான் அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் பல உள்நாட்டு போட்டிகளிலும் பயிற்சியாளராக உள்ளார்.
இவர் தலைமையில் தான் சன்ரைசர்ஸ் அணி 2016 ஐபிஎல் கோப்பையையும், 2018 ஐபிஎல்-ல் இறுதிப் போட்டியிற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
டாம் மூடி மட்டுமே இந்த வரிசையில் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியிற்கு அணியை கொண்டு சென்ற பயிற்சியாளர்களில் இருவரில் ஒருவர். 2007 உலகக்கோப்பையில் இலங்கை அணியை இறுதிப்போட்டியிற்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.
#4) விரேந்திர சேவாக்
ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கபடுவதிற்கு முன் அந்த பதவிக்கு அதிகம் பேசப்பட்டவர் இவர் தான். சேவாக் இந்த பதவிக்கு ஆர்வம் காட்டுவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. சேவாக் 2015 ஐபிஎல்-லிருந்து தற்போது வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.இந்த வருட ஐபிஎல்-ல் கேப்டன் அஸ்வினுடன் இணைந்து அணியை சிறப்பாக வழிநடத்தினார். ஆனால் இப்போது அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார் சேவாக்.
மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் டெல்லியைசேர்ந்த இவர் விராத் கோலியுடன் இணைந்து தனது கருத்துக்கள் மூலம் 2019 உலகக்கோப்பையிற்கு தேவையான இந்திய அணியை மறுசீரமைக்க முடியும் என்பதே ஆகும்.
#3) ஸ்டீபன் பிளம்மிங்
இந்த வரிசையில் பிளம்மிங் மற்றுமொரு அனுபவமிக்க பயிற்சியாளர் ஆவார். ஐபிஎல் 2 வது சீசனில் இருந்து இவர் பயிற்சியாளராக உள்ளார். இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வரும்பட்சத்தில் அணி கூடுதல் பலம் பெறும்.
இவரின் ஆலோசனை கோலிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.ஏற்கனவே இவருக்கு தோனிக்கும் இடையேயான பிணைப்பு நாம் அறிந்ததே. பிசிசிஐ கேரி கிரிஸ்டனை போல் சிறந்த வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்கும் பட்சத்தில் இவரே முதல் தேர்வாக இருப்பார்.
#2) அனில் கும்பிளே
கும்பிளே இந்தியாவின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ஆவார். இவரது அனுபவம் இந்திய அணிக்கு உதவலாம் இருந்தாலும் இவருக்கும் கேப்டன் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இவர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணி பல தொடர்களை கைப்பற்றியது குறிப்பிடதக்கது. கேப்டனாக கோலி பெரிதளவில் சோபிக்கவில்லை மற்றும் இந்திய அணி நிரந்தரமில்லாத அணியையே கொண்டுள்ளது. எனவே இவரை பிசிசிஐ பயிற்சியாளராக நியமிக்கும் பட்சத்தில் இந்திய அணி பல தொடர்களை வெல்ல வாய்ப்பு உள்ளது.
#1) ராகுல் டிராவிட்
இந்திய ரசிகர்கள் அனைவரின் ஆசையும் ராகுல் டிராவிட்-யை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்பதே. இந்திய அணியின் தலை சிறந்த டெஸ்ட் பேடஸ்மேனும் இவரே. இவர் தனது ஓய்விற்கு பின்னும் கூட இந்திய அணிக்கு பெரிதும் உதவி வருகிறார்.
இவர் யு-19 இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து உலககோப்பையை வென்றது குறிப்பிட்டதக்கது. ஐபிஎல்-ல் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் இவர் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவருடைய பேட்டிங் பயிற்சி இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.
இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து, தென்ஆப்ரிகாவில் ஸ்விங் பந்துகளில் விளையாட தடுமாறி வருகின்றனர். இவரது ஆலோசனை அவர்களின் பேட்டிங்கில் மாற்றத்தை கொண்டு வரும்.
மேலும் ஏதேனும் பயிற்சியாளர்கள் விடுபட்டிருப்பின் கமெண்ட்-ல் தெரிவிக்கவும்.