1932 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி விளையாடும் உரிமையை பெற்றது. 1932 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்குக்கு எதிராக இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது.அதன் பின்னர் இந்திய அணி தற்பொழுது வரை 531 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக மொத்தம் 294 வீரர்கள் விளையாடியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக முதல் சதத்தை அடித்த வீரர் லாலா அமர்நாத். இதுவரை மொத்தம் 82 இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டி சதம் அடித்துள்ளனர்.
இந்த தொகுப்பில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சரியாக ஒரு சதம் அடித்த 5 வீரர்கள் பற்றி காண்போம்
(குறிப்பு: 10கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ளனர்.அவர்களில் , 2௦௦௦ ஆம் ஆண்டுக்கு பின் சதம் அடித்த 5 வீரர்கள் பற்றிய ஒரு தொகுப்பு)
1)முகமது கைப்
19 வயதுக்கு உற்பட்டோருக்கான உலக கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆக இருந்தவர் முகமது கைப். கைப் தனது 20 ஆம் அகவையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களம்கண்டார். 6 வருடங்களில் 13 டெஸ்ட் போட்டிகளில் வீளையாடியுள்ள, அவர் தனது ஒரே டெஸ்ட் சதத்தை விண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடித்தார். அந்த ஆட்டத்தில் அவர் ஆட்டமிழக்காமல் 148 ரன்கள் குவித்தார் .
தொடரில் சிறப்பாக விளையாடிய போதும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. 2018 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் கைப். தற்பொழுது அவர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக உள்ளார்
2)அஜித் அகர்கர்
இந்திய அணியின் தலை சிறந்த வேகபந்துவீச்சாளர்களில் ஒருவர் அஜித் அகர்கர். இந்திய அணிக்காக அவர் 200கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது 20 ஆம் வயதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அணிக்காக முதன்முதலில் களமிறங்கினார்
அவர் தனது ஒரே டெஸ்ட் போட்டி சதத்தை புகழ்மிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்தார். இந்த சதத்தின் மூலம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள 'ஹானர்ஸ் போர்டில்' அஜித் அகர்கர் பெயர் இடம் பெற்றது. 2003 ஆம் ஆண்டு அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 41 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் சாய்த்தார் அந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .
2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார்.
3) இர்பான் பதான்
இந்திய அணியின் அடுத்த 'ஜாஹீர் கான்' என்று கருதப்பட்ட இர்பான் பதான் தனது 19 ஆம் வயதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் முதன்முதலில் களமிறங்கினார். இந்தியா அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பதான் சரியாக 100 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ட்ரிக் விக்கெட் கைப்பற்றிய சில வீரர்களில் பதானும் ஒருவர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் ஓவரில் பதான் தனது டெஸ்ட் ஹாட்ட்ரிக் கைப்பற்றினார் மேலும் அந்த அணிக்கு எதிராக பெங்களூரு நகரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார்.
2012 ஆம் ஆண்டு இந்திய அணியிலிருந்து பதான் நீக்கப்பட்டார் தற்பொழுது அவர் ஜம்மு & காஷ்மீர் அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடிவருகிறார்.