4) தினேஷ் கார்த்திக்
தோனியின் வருகையால் அதிகம் பாதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் முதலில் களமிறங்கினார் கார்த்திக். தோனியின் வருகைக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் அவ்வப்பொழுது துவக்க வீரராக களமிறக்கப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது அந்த தொடரில் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார், அந்த ஆட்டத்தில் டாப்-4 இந்தியா வீரர்கள் சதம் அடித்தனர்
பின்னர் சரியாக விளையாடாத காரணத்தால் அணியில் இருந்தது நீக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அதிலும் அவர் சரியாக விளையாடததினால் அவர் இடத்தை இளம் வீரர் ரிஷப் பந்த் கைப்பற்றினார்.
5) அனில் கும்ப்ளே
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் அனில் கும்ப்ளே. தனது 18 ஆம் வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல்முதலாக கும்ப்ளே களமிறங்கினார்.
இந்திய அணிக்காக 132 போட்டிகளில் விளையாடியுள்ள கும்ப்ளே 619 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். மேலும் அவர் 1999 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அந்த அணியின் அனைத்து விக்கெட்களையும் கைப்பற்றினார் கும்ப்ளே.
கும்ப்ளே தனது ஒரே டெஸ்ட் சதத்தை லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடித்தார். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முடிவில் கும்ப்ளே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், பின்னர் சிறிது காலம் இந்தியா அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார் கும்ப்ளே. கேப்டன் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனது பதவியை ராஜினாமா செய்தார்
எழுத்து- ப்ரோக்கன் ஸ்போர்ட்ஸ்
மொழியாக்கம்- தினேஷ் சத்யா