ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இந்தியா முதலில் பேட்டிங் செய்யும் போது ரோஹீத் சர்மா பல முறை சதங்களை விளாசியுள்ளார். இந்த சதங்கள் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளன. அதே சமயத்தில் இந்திய அணியின் சேஸிங்கிலும் அதே சம அளவிற்கு சதங்களை விளாசியுள்ளார். இந்திய அணி சேஸ் செய்யும் போது மொத்தமாக ரோஹித் சர்மா 4570 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 சதங்கள் அடங்கும்.
இவரது சமீபத்திய சிறப்பான இன்னிங்ஸ், 2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 122 ரன்களை குவித்துள்ளார். இவரது நிலையான மற்றும் பொறுப்பான ஆட்டத்திற்காக கேப்டன் விராட் கோலியால் ரோஹீத் சர்மா அதிகம் மதிப்பிடப்பட்டுள்ளார். இந்த சதத்தின் மூலம் உலகில் சேஸிங்கில் அதிக சதங்களை விளாசிய 4 கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தில்கரத்னே தில்ஷானுடன் பகிர்ந்து கொண்டார். இவருக்கு முன்பாக விராட் கோலி (25 சதங்கள்), சச்சின் டெண்டுல்கர் (17 சதங்கள்), கிறிஸ் கெய்ல் (12 சதங்கள்) ஆகியோர் உள்ளனர்.
இவரது ஸ்பெஷல் பேட்டிங் என்னவென்றால் நெருக்கடியான ஓவர்களில் சமாளித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர். விக்கெட்டுகள் மலமலவென சரிந்தும், தேவையான ரன் ரேட் அதிகரித்துக் கொண்டே இருந்தபோது ரோகித் சர்மா கணித்து மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோஹீத் சர்மாவின் அர்பணிப்பினால் இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதே ஆட்டத்திறன் இனிவரும் போட்டிகளிளும் இவர் தொடருவார் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நாம் இங்கு ஓடிஐ கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவால் சேஸ் செய்யப்பட்ட சிறந்த 5 சவாலான இலக்குகளை பற்றி காண்போம்
#5 141* vs ஆஸ்திரேலியா, ஜெய்ப்பூர், 2013
2013ல் நடந்த இந்திய-ஆஸ்திரேலிய இருதரப்பு ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. ரோஹீத் சர்மா அந்தப்போட்டியில் அதிக நெருக்கடியை சந்திப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய பௌலிங்கை துவம்சம் செய்து 123 பந்துகளில் 141 ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இந்த இலக்கை 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 39 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே அடைந்தது. இந்த போட்டியில் ரோஹீத் சர்மா 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசினார்.
இந்த மைதானம் பௌலர்களுக்கு சாதகமானது இல்லை. இருப்பினும் 6 வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் இந்த இலக்கு மிகவும் அதிகமானதாகும். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஷீகார் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ரோஹீத் சர்மா இரண்டாவதாக சிறந்த இன்னிங்ஸை அளித்து வந்தார். இருப்பினும் ஷீகான் தவான் தனது விக்கெட்டை இழந்த உடனே ரோஹீத் சர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலக்கினை எட்டினார்.
#4 152* vs மேற்கிந்தியத் தீவுகள், கௌஹாத்தி, 2018
2018ல் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த போது, தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஷீம்ரன் ஹட்மைர் 78 பந்துகளில் 106 ரன்களும், கீரன் பௌலின் அரைசதம் ஆகிய டாப் ஆர்டர் பேட்டிங் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ரன்களை குவித்தது.
323 என்ற சற்று அதிக இலக்கினை மேற்கிந்தியத் தீவுகள் குவித்ததாக நினைத்திருந்தது. ஆனால் ரோஹீத் சர்மா அதனை சிதைத்தெறிந்தார். வலதுகை பேட்ஸ்மேன் ஆரம்பத்தில் மிகவும் பொறுமையாக ஆட்டத்தை கையாண்டார். ஆனால் சற்று செட் ஆகி விட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என இருவர்களது பௌலிங்கையும் சிதரவிட்டார்.
ஷீகார் தவான் 2வது ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ரோஹீத் 246 ரன்களை விராட் கோலியுடன் பார்ட்னர் ஷிப் செய்து விளையாடினார்.விராட் கோலியும் தனது சிறப்பான ஆட்டத்தினால் 107 பந்துகளில் 140 ரன்களை குவித்தார்.
ரோஹீத் சர்மா 84 பந்துகளில் சதமடித்தார். அடுத்த 32 பந்துகளிலே 150 ரன்களை குவித்தார். சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். 8 ஓவர்கள் மீதமிருந்த நிலையிலேயே இந்தியா இலக்கை எட்டியது. இறுதியாக ரோஹீத் சர்மா 117 பந்துகளை எதிர்கொண்டு 152 ரன்களை குவித்தார். இதில் 15 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடங்கும்.