சர்வதேச அணியில் விளையாட வேண்டும் என்பது அனைத்து விளையாட்டு வீரர்களின் கனவு. ஆனால் அதிர்ஷ்டவசமாக அணியில் இடம் பிடித்த 5 வீரர்களைப் பற்றிக் கீழ்வருமாறு காணலாம்.
சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களை நிரூபிக்க இந்திய அணியில் போதுமான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வியடைந்தனர். ஆனால் அவர்கள் எப்படியோ தங்கள் வாய்ப்பை அணியில் தக்கவைத்து கொண்டனர்.
#5 ஸ்டூவர்ட் பின்னி
இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆல் ரவுண்டர் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கர்நாடக வீரர் ஸ்டூவர்ட் பின்னி. அவர் ஒரு நல்ல ஆல் ரவுண்டர் என்று பெயர் எடுத்தார். பந்தை நன்றாக ஸ்விங் செய்யக் கூடியவர். நீண்ட சிக்சர்களைக் அடிக்கும் திறன் உடையவராகவும் இருக்கிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் 23 சர்வதேச போட்டிகளில் 450 ரன்களை எடுத்துள்ளார் மற்றும் 24 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இவரது பல தோல்விகளைத் தொடர்ந்து, தேர்வாளர்களால் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். ஹார்டிக் பாண்டியா மற்றும் கெதர் ஜாதவ் ஆகியோரின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக இவர் அணிக்கு மீண்டும் வருவது சற்றே கடினம் தான்.
#4 வருண் ஆரோன்
ஜார்கண்ட் கிரிக்கெட் வீரரான வருண் ஆரோன் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்பட்டார். அவரது அதிவேகமே அவர் பந்தைச் சரியாக டெலிவரி செய்வதற்கு தடையாக இருந்தது.
2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆரோன் தனது ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ள ஆரோன், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவரது சர்வேதேச மற்றும் IPL கேரியரில் பல வாய்ப்புகள் கிடைத்தும் காயம் காரணமாக சரியாக சோபிக்க முடியாமல் போனது.
#3 ரமேஷ் போவார்
முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரமேஷ் போவார் ஒரு சூழல் பந்து வீச்சாளர். நல்ல உள்ளூர் செயல்திறனுக்கு பிறகு அணியில் சேர்க்கப்பட்டார். 2004 ல் பாகிஸ்தானுக்கு எதிராக தனது ஒருநாள் மற்றும் சர்வதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அவர், அதன் பிறகு 2006 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை அணிக்குத் திரும்பவில்லை. 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள போவார், இந்திய அணிக்கு 34 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பவார், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும், அவரது மோசமான உடற்பயிற்சி மற்றும் ஃபீல்டிங் திறன்கள் காரணமாக அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். 2007 ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிற்கு அவர் கடைசியாக விளையாடினார்.
#2 தினேஷ் மோங்கியா
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ஒரு நடுத்தர பேட்ஸ்மேனாக களம் இறங்குபவர் தினேஷ் மோங்கியா. 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது சர்வதேச டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். மேலும் அவரது ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தை அடித்தார். மோங்கியா, 2002 ல் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சில போட்டிகளில் இவரது சுமாரான வெளிப்பாட்டால், இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு மறுபடியும் இந்தியாவிற்கு ஆடும் வாய்ப்பு 2006ல் கிடைத்தது. இவரது கடைசி சர்வதேச ஆட்டமும் அதே வருடம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அமைந்தது.
#1 ரோஹன் கவாஸ்கர்
ரோஹன் கவாஸ்கர், இவரது தொடக்க கிரிக்கெட் வாழ்க்கை முதலே பல விமர்சனங்களை எதிர் கொண்டார். அதற்குக் காரணம் இவரது தந்தையின் (சுனில் கவாஸ்கர்) மேல் இருந்த ரசிகர்களின் நம்பிக்கை. அவரைப் போலவே ரோஹனும் செயல் பட வேண்டும் என்று அதிக அழுத்தம் தரப்பட்டது. இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல் பட்டதோடு, சராசரியும் 50க்கு மேல் வைத்து இருந்தார். இதன் காரணமாக 2003ம் ஆண்டு இந்தியாவிற்கு விளையாடும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது.
எனினும், அவருக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பூர்த்தி செய்யத் தவறிவிட்டார். தனது வாழ்நாளில் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 18.88 என்ற சராசரியில் 151 ரன்கள் எடுத்துள்ளார். பின்பு 2012 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக தனது ஓய்வை அறிவித்தார்.