3) ரோஹித் சர்மா
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில உள்ளார். இந்த ஆண்டு 19 போட்டிகளில் விளையாடி 1030 ரன்களை குவித்துள்ளார்
இந்த ஆண்டில் மொத்தம் 5 சதங்களை அடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ஒரு ஆட்டத்தில் சதம் அடித்த ரோஹித், பின்னர் நடந்த ஆட்டங்களில் சோபிக்க தவறினார்
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்தார். பின்னர் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக வழிநடத்தினார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார். ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லவும் உதவினார்.
விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் முதல் ஆட்டத்தில ஆட்டமிழக்காமல் 117 பந்துகளில் 152 ரன்கள் குவித்தார். மேலும் 39 சிக்ஸர்கள் அடித்து இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார், உலகின் இரண்டாவது சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா.
2018 இல் ரோஹித் சர்மா
போட்டிகள் - 19, ரன்கள் - 1030, சராசரி - 73.57, ஸ்ட்ரைக் ரேட் - 100, ஐம்பது - 3, நூறு- 5, அதிகபட்ச ஸ்கோர் - 162
2) குல்தீப் யாதவ்
ஒரு நாள் பந்துவீச்சாளர்கள்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள குல்தீப் யாதவ் இந்த ஆண்டு இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவர். 24 வயதான தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களை கைப்பற்றினார். சஹால் மற்றும் குல்தீப் இணைந்து இந்திய அணிக்கு ஒரு வலுவான ஸ்பின் கூட்டணியை அமைத்தனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்களை வீழ்த்தி அந்த அணியை நிலைகுலைய செய்தார். ஆசிய கோப்பை போட்டியில் 10 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த ஆண்டு 19 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் குல்தீப் யாதவ். 2018 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்தார் குல்தீப்.
2018 இல் குல்தீப் யாதவ்
போட்டிகள் - 19, விக்கெட்டுகள் - 45, சராசரி - 17.78, எகானமி - 4.64, சிறந்த பந்துவீச்சு - 6/25, 4- விக்கெட் ஹால் - 3, ஸ்ட்ரைக் ரேட் - 22.9
1) விராட் கோலி
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் அசைக்க முடியாதவராக திகழ்கிறார். இந்த ஆண்டு வெறும் 14 போட்டிகளில் ஆடி 1202 ரன்களை குவித்துள்ளார். இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 133.56.
இந்த ஆண்டு மொத்தம் 6 ஒரு நாள் சதங்கள் அடித்தார் கோலி. தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் 6 போட்டிகளில் மூன்று சதம் உள்பட 558 ரன்கள் குவித்தார் கோலி. வேலை பழு காரணமாக ஆசிய கோப்பை போட்டியில் கோலி விளையாடவில்லை.
பின்னர் நடந்த விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் அடித்தார் கோலி. இதன் மூலம் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார் கோலி.
இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கோலி. மேலும் ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார் கோலி.
2018 இல் விராட் கோலி
போட்டிகள் - 14, ரன்கள் - 1202, சராசரி - 133.56, ஸ்ட்ரைக் ரேட் - 102.56, ஐம்பது - 3, நூறு- 6, அதிகபட்ச ஸ்கோர் - 160 *
எழுத்து : சிலம்பரசன் கே.வி
மொழியாக்கம் : தினேஷ் சத்தியா