இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தொடராக IPL இருக்கிறது. பல அணிகள் இதில் பங்கேற்றாலும் அதில் முக்கிய அணியாகச் சிறப்பாக செயல் படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK). இவ்வணியின் வெற்றிக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கிய புள்ளியாக விளங்குவது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
இரண்டு வருட தடைக்கு பிறகு சீசன் 10ல் பங்கேற்ற CSK அணி, வெற்றிகரமாக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முக்கிய பங்கு வகித்தது - அம்படி ராயுடு, வாட்சன் மற்றும் பிராவோ போன்ற முன்னனி வீரர்கள். அனுபவம் வாய்ந்த கேப்டன் மற்றும் முன்னனி வீரர்களின் ஊண்டுதலால், புதிதாக வருபவர்கள் கூட சிறப்பாக செயல்படுவதே இந்த அணியின் வெற்றி மந்திரம்.
இத்தொகுப்பில் நாம் கீழ் காணவிருப்பது, அடுத்த IPL தொடரில் எந்த 5 வீரர்களை CSK அணி ஏலத்தில் எடுக்க முயற்சிக்க வேண்டுமென்று.
#5 ஐடன் மார்க்ராம்
ஐடென் மார்க்ராம், கிரிக்கெட் உலகில் எந்த ஒரு அறிமுகமும் இவருக்கு தேவையில்லை. தென் ஆப்பிரிக்காவின் சமீபத்திய பேட்டிங் சூப்பர் ஸ்டார் ஒரு வருடம் முன்பு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, தனது வரவை உலகிற்கு அறிமுகம் செய்தவர்.
இதுவரை தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் அணியில் பங்கேற்று நல்ல ரன்களை குவித்து கொண்டிருக்கும் இவரை ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பாக செயல் பட செய்ய வேண்டும் என்ற முனைப்பில் அந்நாட்டின் கிரிக்கெட் போர்டு பல யுக்திகளை மேற்கொண்டுவருகிறது.
டி 20 வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டுருக்கும் இவர், CSK போன்று ஒரு பெரிய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமாயின் அது இவரின் வருங்கால தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாழ்க்கைக்கும் மற்றும் CSKன் வெற்றிக்கும் நிச்சயம் உதவியாக இருக்கும்.
#4 ஜேசன் ஹோல்டர்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனான இவர், கடந்த ஓராண்டில் பேட்டிங் ,பௌலிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் சிறப்பான திறனை வெளிக்காட்டினார். ஆரம்ப காலத்தில் CSK அணிக்காக ஒரு சில போட்டிகளில் விளையாடிய இவர், அதன் பிறகு அணியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
சென்னை அணியின் பலவீனமாக இருப்பது அவர்களின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிவர திறனை வெளிப்படுத்தாதது தான். ஹோல்டர் இந்த அணிக்கு திரும்பவும் விளையாடும் பட்சத்தில் அந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். இவரது உயரத்தை பயன்படுத்தி பந்தை நன்றாக பௌண்ஸ் (Bounce) செய்யக்கூடியர் என்பதால், பவர்ப்பிலே (powerplay) போன்ற சமயத்தில் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு இவரை சமாளிப்பது சற்றே கடினமாக இருக்கும்.
#3 இயன் மோர்கன்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், ஒரு சிறந்த ஒரு நாள் மற்றும் டி 20 பேட்ஸ்மேன். IPL சீசன் 10ன் ஏலத்தின் போது பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அழித்தது இவரை யாரும் ஏலத்தில் எடுக்காதது. இடது கை பேட்ஸ்மேனான இவர், பந்தை பவுண்டரிக்கு வெளியே அடிப்பதில் மிகவும் வல்லமை பெற்றவர்.
இருப்பினும் இவரை எந்த அணியும் சீசனின் மாற்று வீரராக(Replacement Player) ஆகக்கூட கண்டுக்கொள்ளவில்லை. அணியின் தேவைக்கேற்ப தன் ஆட்ட ஸ்டைலில் மாற்றம் செய்ய கூடிய மோர்கன், பேட்டிங் மட்டுமில்லாமல் நல்ல கேப்டைன்ஷிப் செய்யக்கூடியவர்.
இவரை போன்ற வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுப்பது, அணிக்கு மிகுந்த வலிமை தரும். தோனிக்கு பிறகு கேப்டனாகும் வாய்ப்பு கூட கிடைக்கலாம்.
#2 ஹென்ரிக் கிளாசென்
கடந்த சீசன் மூலம் IPL ல் அறிமுகமானவர் ஹென்றிச் க்ளாஸன். சர்வதேச ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் பலரது கவனத்தை ஈர்த்தார். ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு மாற்று வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரைக் களம் இறக்கியது.
ஆனால் வாய்ப்பு கிடைத்தும் தனது வழக்கமான ஆக்ரோஷ ஆட்டத்தை இவரால் சரியாக வெளிக்காட்ட முடியவில்லை. இதற்குக் காரணம் இந்திய மண்ணில் சரியான முன் அனுபவம் இல்லாமையாகக் கூட இருக்கலாம்.
எப்போதும் நல்ல திறமைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெமிங்கின் பார்வை க்ளாஸெனின் பக்கம் திரும்பும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. சின்னஸ்வாமி போன்ற சிறிய மைதானங்களில் இவரது ஆக்ரோஷமான ஆட்டம் நிச்சயம் CSK விற்கு கைக்கொடுக்கும்.
#1 சாம் குர்ரான்
சாம் குர்ரான் கிரிக்கெட் உலகில் ஒரு தலைசிறந்த ஆல் ரவுண்டராக வளர்ந்து வருகிறார். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் தனது பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் சாம் குர்ரான். தனது பௌலிங் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல், பேட்டிங் மூலம் எதிரணியின் பந்து வீச்சாளர்களை ஒரு கைப்பார்த்தார்.
நல்ல ஆல் ரவுண்டரை தேடிக்கொண்டிருக்கும் சென்னை அணிக்கு இவரது வருகை நிச்சயம் பலத்தை அளிக்கும்.