#2 ஹென்ரிக் கிளாசென்
கடந்த சீசன் மூலம் IPL ல் அறிமுகமானவர் ஹென்றிச் க்ளாஸன். சர்வதேச ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் பலரது கவனத்தை ஈர்த்தார். ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு மாற்று வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரைக் களம் இறக்கியது.
ஆனால் வாய்ப்பு கிடைத்தும் தனது வழக்கமான ஆக்ரோஷ ஆட்டத்தை இவரால் சரியாக வெளிக்காட்ட முடியவில்லை. இதற்குக் காரணம் இந்திய மண்ணில் சரியான முன் அனுபவம் இல்லாமையாகக் கூட இருக்கலாம்.
எப்போதும் நல்ல திறமைகளுக்கு வாய்ப்பு அளிக்கும் சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெமிங்கின் பார்வை க்ளாஸெனின் பக்கம் திரும்பும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. சின்னஸ்வாமி போன்ற சிறிய மைதானங்களில் இவரது ஆக்ரோஷமான ஆட்டம் நிச்சயம் CSK விற்கு கைக்கொடுக்கும்.
#1 சாம் குர்ரான்
சாம் குர்ரான் கிரிக்கெட் உலகில் ஒரு தலைசிறந்த ஆல் ரவுண்டராக வளர்ந்து வருகிறார். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் தனது பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் சாம் குர்ரான். தனது பௌலிங் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல், பேட்டிங் மூலம் எதிரணியின் பந்து வீச்சாளர்களை ஒரு கைப்பார்த்தார்.
நல்ல ஆல் ரவுண்டரை தேடிக்கொண்டிருக்கும் சென்னை அணிக்கு இவரது வருகை நிச்சயம் பலத்தை அளிக்கும்.